ஒழுவிலொடுக்கம்

உரை ஆசிரியர் கூற்று

சமரபுரி யாறுமுகன் றானேயென் னுள்ளத்
தமரவிருந் திந்நூற் கருத்தம் – திமிரமறக்
காட்டினான் பொல்லாக் கடையேனைச் சீர்வீட்டி
னாட்டினான் பேரருளி னால்.
கையிலுறை பாலின்பங் காட்டுவிர லேகசிவ
மெய்யருளாம் பாதமிடு மென்பதுகை – துய்ய
இருட்கே வலசகல மெந்தைசம் பந்தன்
றிருக்கோலங் கொண்ட சிறப்பு.
அரவுலிடந் தீர்க்கு மமணருடன் மாய்க்குந்
திரகதியி வெண்ணிலரைச் சேர்க்கும் – புரமயிலை
என்பைப்பெண் ணாக்கிவிடு மேழையே னேழ்பிறவித்
துன்பத்தை நீக்குவான் சொல்.