எங்களைப்பற்றி

 சீகாழியென்னும் திருநகர்க் கண்ணே மெய்ந்நெறி விளங்க வீற்றிருந்தருளிய திருஞான சம்பந்தப் பிள்ளையாரது வள்ளற்றன்மையுடைய மலர்போலும் திருவடிகளின் அருட்டுணையாலும் மற்றும் எல்லாம் வல்ல தனித்தலைமை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராய் விளங்கும் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் அருட்டுணையாலும், திருவருள் ஸ்ரீ குமாரவேலு சுவாமிகள், வான்பற்றி நின்ற மறை பொருளில் எழாநின்ற சிவானந்தத் தேனை சுருதி, குரு, சுவாநுபவத்தால் தாம் அனுபவஞ் செய்தவாறும், சிவானந்தப்பேற்றின் தன்மையைக் காருண்யத்தால் அடியவர்களும் பெற்றுய்வதற்கு திருஅருட்பிரகாச வள்ளலார் குருகுலம் நிறுவியும், மனதை சிற்சபையின்கண் நிறுத்தி, திருவடிசூட்டி ஞானதீக்கை வழங்கியும், ஜீவகாருண்யம், சுத்ததேகம், சாகாக்கல்வி, மரணமிலாப் பெருவாழ்வு, தத்துவமசி, சகசநிட்டை போன்ற பல உயர்ந்த ஞான உபதேசங்களை நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்களுக்கு அவரவர் அறிவின்கண் அருளுருவாய் நின்றறிவித்தும், ஆசாரியவுருவாய்
வெளிநின்று அநுக்கிரகித்தும், இல்லறத்தார்க்கு இடுக்கண்களை விலக்கியும் மற்றும் பரவித்தை, பிரம்ம வித்தை, வகரவித்தை, தகரவித்தை மற்றும் பல ஞானயோக வித்தைகளோடு ஞான உபதேசம் புரிந்தார்கள்.

திருவருள் ஸ்ரீ குமாரவேலு சுவாமிகள் நிறுவிய திருஅருட்பிரகாச வள்ளலார் குருகுலத்தில் சுவாமிகளின்
அருளாக்கினையின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவருள் ஞான சத்சங்கம் திருவருளாகிய குருவருளின் கருணையால் நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில் திருவருள் ஞான சத்சங்கம் திருவருளாகிய குருவருளின்
கருணையால் நடந்து வருகிறது.

மேலும் திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாள் மற்றும் தைப்பூசம் திருநாளில் அன்னதானமும்
நடைபெறுகின்றது.

சுவாமிகளுக்கு வருடாந்திரம் புரட்டாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் மஹா குருபூசையும், அன்னதானமும்
நடைபெறுகின்றது. திருவருள் ஸ்ரீ குமாரவேலு சுவாமிகளின் மலர்போலும் திருவடிகளைப் போற்றியும் வணங்கியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது எல்லையில்லா கருணையை எல்லா உயிர்களும்
பெற்று இன்புற்று வாழ வேண்டும் என வாழ்த்தியும் வணங்கியும் தெய்வத்திருவருளை தியானிக்கின்றோம்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

திருச்சிற்றம்பலம்

திருவருட் பிரகாச வள்ளலார் குருகுலம் இணைப்பு

அதிஷ்டானம் பாகூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், கன்னியாகோயில் பேருந்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நிறுத்தம், கடலூரிலிருந்து 9 கிமீ, கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ, கடலூர் துறைமுகத்திலிருந்து 14 கிமீ சந்திப்பு ரயில் நிலையம், அரியாங்குப்பத்திலிருந்து 14 கி.மீ., புதுச்சேரி பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 18 கி.மீ., 19 புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து கி.மீ., புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ., சென்னையிலிருந்து 162 கி.மீ. விமான நிலையம் மற்றும் சென்னையில் இருந்து 169 கி.மீ. பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் வரையிலான பேருந்து வழித்தடத்தில் ஆதிஸ்தானம் அமைந்துள்ளது. பக்தர்கள் கீழே இறங்கலாம் கன்னியாகோயில் பேருந்து நிறுத்தம்.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் ஆதிஸ்தானம் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பஹூரை இணைக்கும் உள்ளூர் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து இதை அடையலாம் அதிஷ்டானம்.