ஒழுவிலொடுக்கம்

யோகக் கழற்றி

8.வது “உபதேசப்பித்தோ ” என்னும் திருவெண்பா

கவுசனை – யாதாயினும் ஓர் பொருளை  உள்வைத்து மறைய மேல்மூடிக் கட்டு மேற்கட்டு

14-வது – “கூட்டிற்தரங்கை என்னும் திருவெண்பா

சுழல் விறிசு – கொள்ளி வட்டம் போற் சுற்றுவதாய ஒருவகை மருத்துவாணம் இத்தேயத் திக்காலத்தில் சுழல்புரிசு என்று வழங்குகின்றது.

18-வது “மண்ணை மலையை என்னும் திருவெண்பா

அநன்னியம் – அன்னியமல்லாமை.

22-வது “பழக்கங்கொடியது பார்” என்னும் திருவெண்பா

நெற்பொலி – தூற்றாநெல்.

23-வது “கட்டியநான் விட்டாலும் ” என்னும் திருவெண்பா

தும்பு செறித்து – தும்பு அவிழ்த்து .

30-வது “மறப்பு நினைப்பும் திருவெண்பா

அனுபவிக்கச் சிதைக்கும் – அனுபவிக்க அறிகின்றபோதும்.