ஒழுவிலொடுக்கம்

253. கண்மணியினாகாய நீழல் கலந்தாற்போல்

கண்மணியினாகாய நீழல் கலந்தாற்போல்
உண்மையை நீ யுண்டென் றெனையுணர்த்தித் – துண்ணெனவே
பார்த்திருந்தசித்திரம் போற் பார்த்தானை நாம்பாவித்
தோத்திரஞ்செய் யாப்பிறவாச் சொல்.

இத்திருவெண்பாவின் அருத்தம் இந்நூலினை நன்குணரும் நெறியினது நல்லறிவாளர்க்குத் தானே விளங்கும் எனக்கொள்க.

பத்தாம் அதிகாரம் நிலையியல்பு முற்றும்.

அதிகாரம் பத்திற்கு வெண்பா –253.