2-வது ” அறுசமையத்தோர்க்கும் ” என்னும் திருவெண்பா.
முடிகள சமுத்தி – முடி – சிரசு ; களசம் – நீக்கம், முத்தி-வீடு.
3-வது “வாசிக்குச் சாவீரர்” என்னும் திருவெண்பா .
வாசியென்ற வார்த்தை – இது செய்க விடுக வென்று நியாயமாகக் கூறும் வார்த்தை .
8-வது ” அறிந்துபற்றி நின்று” என்னும் திருவெண்பா.
வியாபகம் – கலப்பு ; வியாத்தி – கலக்கப்படுவது.
9-வது ” கூரிருளின் மின்மினி ” என்னும் திருவெண்பா.
விசர்க்கரித்தல் – விடுத்தல்.