ஒழுவிலொடுக்கம்

அதிகாரங்களின் பெயர் முறை செய்யுள் தொகை

சீராகு மாகமத்திற் செப்புமியற் சித்தாந்த
நீராகு முப்பொருளி னேர்தெளிவி னோர்த்துய்தற்
கொத்த பொதுவி லுபதேச மேழொன்பான்
சத்திநி பாதத்துத் தமரொழிவு நாலே
ழருமையோ கக்கழற்றி யார்ந்திடுமை யாறாங்
கிரியைக் கழற்றி கிளத்துமீ ரேழாம்
சரியைக் கழற்றியதிற் சாற்றும் ரேழாம்
விரத்தி விளக்கத்தின் மேவும் பதின்மூன்
றுறுப்புறு நற்றுறவி னுற்றவையைந் தாகு
மருளவததைத்தன் மைக்கு ளரிய வாறேழாம்
வாதனைமாண் டார்தன்மை வாய்த்தமும் மூன்றாகும்
கோதி னிலையியல்பிற் கூறல் பதிமூன்றா
மொருபத்ததிகாரத் தோங்குதிரு வெண்பா
விருநூற்றைம் பான்மூன் றிவைக ளிசையத்
தழுவியுரைத் திட்டான் றகைமையுறு வள்ள
லொழிவி லொடுக்கத்தி னுள்.
பொதுவிலுப தேசத்தி லறுபான் மூன்று
புகழ்சத்தி பதியொழிவி லிருபத்தெட்டு
கதியோகங் கருமஞ்ச ரியைக்க ழற்றி
கருதுமுப்பான் பதினாறு பதினா லாகும்
துதிவிரத்தி விளக்கந்துற வருளவத்தைத் தன்மை
தொகைபதின்மூன் றிருப்பதைந் தாறே ழாகும்
மதிதருவா தனைமாண்டார் தன்மைநிலை யியல்பு
வழங்குமென்பான் பதின்மூன்றாய் வகுக்கும் பாவே.
பொற்புறுநற் போரூர்ப் பொலிந்த சிதம்பரத்தே
விற்பொலியும் வேலர் வியனருளால் – தற்போ
தொழிலுறு மானந்தத் துள்ளொடுங்கச் செய்த
ஒழிவிலொடுக் கத்துரைமுற் றுஉ.