சுட்டுப்போ தங்கழன்ற சுத்தமரை மாத்திரையின் மட்டுத்தா னற்றநிட்டை வாய்க்குமாற் - கெட்டேன் றலைச்செய்யு மாநந்தஞ் சற்றோபால் வாரி முலைக்கண்ணிற் றோன்று முறை (இ-ள்.) சுட்டுப்போதம் கழன்ற சுத்தம் அரைமாத்திரையில் மட்டு தான் அற்ற நிட்டை வாய்க்குமாற் கெட்டேன் தலைச்செய்யும் ஆநந்தம்...
ஒழுவிலொடுக்கம்
இயோகக்கழற்றி
110. உதித்தொடுங்கும் பொய்க்கா ருபாதான மென்னா
உதித்தொடுங்கும் பொய்க்கா ருபாதான மென்னா துதிப்பை யுதிப்பா லொடுக்கிற் - பதைத்தெழுந்த பந்தன்றோ சாட்சியைப் போற் பார்வேர் பறித்தமரங் கொந்தலர்ந்து காயாதொக்கும். (இ-ள்.) உதித்து ஒடுங்கும் பொய்கார் உபாதானம் என்னாது உதிப்பை உதிப்பால் ஒடுக்கின் பதைத்து எழுந்த பந்து அன்றோ...
109. மண்ணை மலையை மறிகடலை வானகத்தை
மண்ணை மலையை மறிகடலை வானகத்தை யெண்ணி லளந்தறிய வெய்துமோ - வுண்மையை நீ யுண்டென்னி லோர் வார்த்தை யுண்டல்லா துன்னொழிவைக் கண்டறியி லன்னியமாங் காண். (இ-ள்.) மண்ணை மலையை மறிகடலை வானகத்தை எண்ணில் அளந்து அறிய எய்துமோ - மண்ணக முழுதையும் வானக முழுதையும் நீட்டல் அளவையானும், மலையை...
108. நீர்க்குப் பதமு நெருப்புச் சுடுந்தொழிலுங்
நீர்க்குப் பதமு நெருப்புச் சுடுந்தொழிலுங் காற்றைச் சலிக்கவுமார் கற்பித்தா - ரார்க்குமிது போகா மனாதி புதைக்குநிழல் போலாநீ யாகாயம் போற்பா ரறும். (இ-ள்.) நீர்க்குப்பதமும் நெருப்புச் சுடும் தொழிலும் காற்றைச் சலிக்கவும் ஆர் கற்பித்தார் ஆர்க்கும் இது மனாதி போகா-நீர்க்குக்...
107. அறிவா யிரீர்மயக்க மாகா தசையில்
அறிவா யிரீர்மயக்க மாகா தசையில் விறிசாய் விடாதோ விகற்பம் - பிறியாத் தராசி னுனிபோற் சமாதிவரின் ஞான விராசனுமக் கொப்பா ரெவர். (இ-ள்.) அறிவு ஆய் இரீர் மயக்கம் ஆகாது அசையில் விகற்பம் விறிசு ஆய்விடாதோ - கருவிகளை எல்லாம் நீங்கி நின்ற உயிரறிவை விட்டு நீங்காத அருளறிவாயிருங்கோள்...
106. பற்றாத போதும் பதறும் பழக்கமதைக்
பற்றாத போதும் பதறும் பழக்கமதைக் கற்றாலென் னாகக் கலக்காது - சற்றேநீ தீண்டிவிடிற்றான் காண்செனன மரணமது மாண்டுவிடி னீசிவமா வை. (இ-ள்.) பற்றாதபோதும் பதறும் பழக்கமதைக் கற்றால் என் ஆகக் கலக்காது- ஓர் பொருளையும் போதங்கருதாது அசைவற்றிருந்தபோதும் முன்னர் அசைந்த அப்போதத்தோடுங்...
105. கூட்டிற் குரங்கைநிழற் கோரணிக்கூத் தாமனத்தை
கூட்டிற் குரங்கைநிழற் கோரணிக்கூத் தாமனத்தை யாட்டிப் பிடித்தா ரடக்குவார் - காட்சியறச் சும்மா விருக்கி லசையாது சுற்றுவிறி சம்மானை பம்பரங்கா ணும். (இ-ள்.) கூட்டில் குரங்கை நிழல் கோரணிக்கூத்து ஆம் மனத்தை ஆட்டிப் பிடித்து ஆர் அடக்குவார் - கூட்டில் அடைத்துவைத்த...
104. ஒட்டா திருக்கவென்றா லொட்டா துறக்கமாஞ்
ஒட்டா திருக்கவென்றா லொட்டா துறக்கமாஞ் சுட்டா திருக்கிற் சுடர்க்கொழுந்தாந் - துட்ட மனத்தோடு வாயுவை நீர் மண்டையிலே வைக்க நினைப்பீரி தென்ன நிலை (இ-ள்.) ஒட்டாது இருக்க என்றால் ஒட்டாது உறக்கம் ஆம் சுட்டாது இருக்கின் சுடர்க்கொழுந்து ஆம்- உமது யோகத்தால் கருவிகள் ஒன்றும்...
103. வாயுமனங் கண்ணசையா வாறடக்கி மக்கினமாய்
வாயுமனங் கண்ணசையா வாறடக்கி மக்கினமாய் நீபுதைத்து போய்க்கூட னீதியோ - காயத்துக் குட்புறம்பாய் நீதானா யுண்டில்லை யாயதற்கு மப்புறமாய்த் தாக்கற் றதை. (இ-ள்.) வாயு மனம் கண் அசையா ஆறு அடக்கி மக்கினம் ஆய் நீ புதைந்து போய்க் கூடல் நீதியோ- வாயுவும் மனமும் கண்ணும் சிறிதும்...
102. மனவாக்குக் காயத்தான் மாய்ந்தளவை மாண்ட
மனவாக்குக் காயத்தான் மாய்ந்தளவை மாண்ட தெனவாய்ப்பறையறையிலென்னா - நினைவதெலாஞ் சாக்கிரப்பொய் தானுந் தனியனல தற்பரமு நீக்கமற்ற பூரணமென் னில். (இ-ள்.) மனம் வாக்குக் காயத்தால் மாய்ந்து அளவை மாண்டது என வாய்ப்பறை அறையில் என் ஆம் நினைவது எலாம் சாக்கிரப்பொய்-மனம் வாக்குக்...