ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு. இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம்...
ஒழுவிலொடுக்கம்
உரை ஆசிரியர் கூற்று
தெளிசொற் பொருள் விளக்கம்
*பிரளயாகலர் - மும்மலங்களுள் ஒருமல நீத்தோர், அவர் பிரமன் முதலானோர் என்னும் தெளிசொற் பொருள் விளக்கம். 'குதர்க்காரணிய நாச மஹாபரசு. பிரளயாகலர் இருமலமுடைய உருத்திரர்கள் என்றும், சகலராவார் மும்மலமுடையராகிய பிரம விட்டுணு முதற் கிருமி ஈறாகவுள்ள உயிர்கள் என்றும் ஒரு சாரார்...
அதிகாரங்களின் பெயர் முறை செய்யுள் தொகை
சீராகு மாகமத்திற் செப்புமியற் சித்தாந்த நீராகு முப்பொருளி னேர்தெளிவி னோர்த்துய்தற் கொத்த பொதுவி லுபதேச மேழொன்பான் சத்திநி பாதத்துத் தமரொழிவு நாலே ழருமையோ கக்கழற்றி யார்ந்திடுமை யாறாங் கிரியைக் கழற்றி கிளத்துமீ ரேழாம் சரியைக் கழற்றியதிற் சாற்றும் ரேழாம் விரத்தி...
உரை ஆசிரியர் கூற்று
சமரபுரி யாறுமுகன் றானேயென் னுள்ளத் தமரவிருந் திந்நூற் கருத்தம் - திமிரமறக் காட்டினான் பொல்லாக் கடையேனைச் சீர்வீட்டி னாட்டினான் பேரருளி னால். கையிலுறை பாலின்பங் காட்டுவிர லேகசிவ மெய்யருளாம் பாதமிடு மென்பதுகை - துய்ய இருட்கே வலசகல மெந்தைசம் பந்தன் றிருக்கோலங் கொண்ட...