சாக்கிரத்தே கேவலத்தைச் சார்ந்துவிட தத்துவத்தை
நூக்கியொழிப் பார்போ னுழைவதையு -நீக்கியே
கண்ணாடி பார்த்த குரக்கறிவாய்க் காண்பதையு
மெ
(இ-ள்.) சாக்கிரத்தே கேவலத்தைச் சார்ந்துவிடத் தத்துவத்தை நூக்கி ஒழிப்பார்போல் நுழைவதையும்- சாக்கிரத்தில் அதீதத்தைப் பெறும்பொருட்டுத் தத்துவங்களைத் தள்ளி ஒழிப்பார் போன்று, அவற்றுள் தாம் மறைந்திருப்பதையும்,
கண்ணாடி பார்த்த குரங்கு அறிவாய்க் காண்பதையும் அவத்தை அறியில் நீக்கியே எண்ணார் – கண்ணாடி பார்த்த குரங்கு அதனுள் தோற்றிய நிழலைத் தன் நிழல் என்று எண்ணாது, மற்றோர் குரங்கென்று அதனை மெய்யாகக் கருதும் அதன் அறிவுபோல, தற்போதத்தால் தியானித்தறியும் பொருளை அத்தியானத்தின்படி கருவிகளில் தோற்றுவதென்று அறியாது, அதனை மெய்ப்பொருளாய்க் காண்பதையும், சுத்தாவத்தையின் இலக்கணம் அறிவார் எனின் அவர் பொய்யென நீக்கி ஓர்பொருளாய் எண்ணார்.
(வி-ரை.) ஆதாரம் ஆறையும் ஊடுருவி நிற்கின்றோம், தத்துவங்களை எல்லாம் கடந்தோம் என்று கருதிப் பிராண வாயுவில் மறைந்திருத்தலின், “நூக்கி யொழிப்பார்போ னுழைவதையும் ” என்றார்.
சுத்தாவத்தையில் அருள் மயமாய் நிற்போர்க்கு எதிரிட்டவை எல்லாம் பொய்யாகலின், “அவத்தையறியில் எண்ணார்” என்றார்.
ஏ – அசை .
இவ்விரண்டு திருவெண்பாவானும் சகலகேவலங்களை நீக்கித்தம்மை அருளால் அறிந்து சுத்தாவத்தையில் நிற்போர் யோகி கருதிய பொருளை எண்ணாரென்று அறிவி த்தவாறு காண்க.
ண்ணார வத்தையறி யில்.