நெருப்பில் விறகுதியா நெய்யிற்பா றோன்றா வருக்க னிருளை யடர்த்தாற்போன் - மருட்கெடுத்த ஞானத்தின் பேர்கிரியை நாசமெனின் ஞானிகளு மூனத் தொழிலுரைப்பா ரோ. (இ-ள்.) நெருப்பில் விறகு உதியா நெய்யில் பால் தோன்றா அருக்கன் இருளை அடர்த்தாற்போல் மருள் கெடுத்த ஞானத்தின் பேர் கிரியை நாசம்...
ஒழுவிலொடுக்கம்
கிரியைக்கழற்றி
126. ஆகாயம் போவார்க்கு மாவிகையோ வாழ்கடலோ
ஆகாயம் போவார்க்கு மாவிகையோ வாழ்கடலோ மீகாமன் போற்றிரிய வேண்டுமோ-யோகிக்குங் கன்மமோ பூரணன் காண் காலமுமா காயமும்போ யென்ன தொழிலையியற்றும். (இ-ள்.) ஆகாயம் போவார்க்கு மாவிகையோ ஆழ்கடலோ மீகாமன் போல் திரிய வேண்டுமோ -ஆகாய கமனம் பண்ணுவோர்க்கு ஓர் பற்றுக்கோடோ? அவ்வாகாயம் ஆழ்கடலோ?...
125. நீர்க்கும் வழிக்குந் துயரில்லை நீந்தி நடந்
நீர்க்கும் வழிக்குந் துயரில்லை நீந்தி நடந் தார்க்குத் துயரென் றறிவறியா- மூர்க்கருரை யாற்றுக்கு வாய் கட்டி யம்பரத்துக் கேணியிட்டுக் காற்றுக்குக் கால் பிடித்தல் காண். (இ-ள்) நீர்க்கும் வழிக்குந்துயர் இல்லை நீந்தி நடந்தார்க்குத் துயர் என்று அறிவு அறியா மூர்க்கர் உரை-...
124. அக்கினி தேவற் கசீர்த்தியென்று சுக்கரைத்து
அக்கினி தேவற் கசீர்த்தியென்று சுக்கரைத்து வைக்கோலான் மூடி மலையடுப்பிற்-றுக்கியாய் நீரைக் கழுவி நிழலைப் புதைத்தளப்பா ராரைப் போல் வாரென்ன லாம். (இ-ள். அக்கினிதேவற்கு அசீர்த்தி என்று சுக்கு அரைத்து வைக்கோலால் மூடி மலை அடுப்பின் துக்கி ஆய்--அக்கினிதேவனுக்கு அசீரணம்...
123. கிரியைக் கிளைத்து வந்து கேட்டவர்க்குச் சும்மா
கிரியைக் கிளைத்து வந்து கேட்டவர்க்குச் சும்மா திரியச் சுகம்விளைத்த சீமான் - குருவன்றிச் சற்றே பதைப்பத் தரினுஞ் சகம்படைக்கக் கற்றானுங் காலனுமாங் காண். (இ-ள்.) கிரியைக்கு இளைத்து வந்து கேட்டவர்க்குச் சும்மா திரியச் சுகம் விளைத்த சீமான் குரு அன்றி- மனத்தால் பாவிக்கும்...
122. தத்துவத்தை யெல்லாஞ் சடமென்று தாக்கற்றுச்
உ திருச்சிற்றம்பலம் நான்காம் அதிகாரம் கிரியைக்கழற்றி தத்துவத்தை யெல்லாஞ் சடமென்று தாக்கற்றுச் செத்தசத்தின் கண்போற் றிரியாது - வைத்தெடுத்தும் பூரணமே யென்றழைத்துந் தேடிப் புரண்டழுதுங் கோரணிகாட்டும் பேய்க்குவால். (இ-ள்.) தத்துவத்தை எல்லாம் சடம் என்று தாக்கு அற்றுச் செத்த...