கரையடுக்க வந்தாற் றிரையலைக்குங் கப்பல் பொருளடுத்தாற் றோன்றும் பொய்ப்போதம் - விருதினவன் வெற்றிக் குதிகுதித்தோன் போல்வேண்டும் விட்டதுபின் பற்றுமதிற் சிக்கெனநிற் பாய். (இ-ள்.) கரை அடுக்க வந்தால் திரை அலைக்கும் கப்பல் பொருள் அடுத்தால் தோன்றும் பொய்ப்போதம் -அலை அலைக்குங்...
ஒழுவிலொடுக்கம்
அருளவத்தைத் தன்மை
230. அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித்
அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித் தொடும்பக் குவந்தெரியா தோகோ - மடந்தேடிப் பிச்சையாய் மூலையிற் பெண் பேச்சாய் வரினடைக்கைக் கிச்சையாய்க் கைக்கெதிர்நீட்டும். (இ-ள்.) அடங்கத் துறந்தார்க்கு மாசையறப் பாவித் தொடும் பக்குவந்தெரியாது ஒகோ-அகத்து ஆசையிருக்கப் புறத்து ஆசையறப்...
229. தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபே
தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபே ரத்து விதியே காந்தி யாநந்தி - சுத்தன் துரியனவ தூ தன் றுறவிசிவ யோகி நிருவாணி யென்விரத்த னென். (இ-ள்.) தத்துவத்தின் போர்வை சரிந்த திகம்பரிபேர் - முப்பத்தாறு தத்துவங்களாகிய போர்வை சரிந்த அதனால் திகம்பரியாயிருந்த ஞானியினது பெயர்...
228. வாடன் மணம்போல வருந்தா வயிராக்யத்
வாடன் மணம்போல வருந்தா வயிராக்யத் தோடு மெலிந்த வுடம்புடனே - கூடார் நிருவிடயா நந்தசுக நீங்காத நோக்குந் திருமுகமு மென்னை விடா தே. (இ-ள்.) வாடல் மணம்போல் வருந்தா வயிராக்யத் தோடு மெலிந்த உடம்புடனே கூடார்-வாடற்பூவின் மணஞ் சிறிது தோன்றுதல்போல் சிறிது தோன்றும் பிராரத்த...
227. உருகு பரமசுக வுல்லாச நோக்குந்
உருகு பரமசுக வுல்லாச நோக்குந் திருமுகமும் புன்முறுவற் றேசுந் - திருநீறுந் தற்பாவ மாண்ட சரீரத்தி லோர்சாத்து மற்றே வெறுமனழ காம். (இ-ள்) உருகு பரமசுக உல்லாச நோக்கும் திருமுகமும் புன்முறுவல் தேசும் திருநீறும்- உள்ளமுருகப்பண்ணா நின்ற பரமசுக உல்லாசத்தோடுங் கூடிய...
226. மோனிகளைப்பார்த்திமையாமோகமும்வெண்டிங்கண்
மோனிகளைப்பார்த்திமையாமோகமும்வெண்டிங்கண் மேனி யழகெழுதா மேற்பத்தி – யான பதுமா தனன்கண்ணும் பானுவும் போற் றானா யெதிராகுஞ் சொப்பனத்திலும். (இ-ள்) மோனிகளை பார்த்து இமையாப் மோகமும் வெண் திங்கள் மேனி அழகு எழுதா -அந்த ஞானிகள் தம்மைப்போல் சுகாதீத முத்தியைப் பெறும் பொருட்டுப்...
225. சாவே பெருநோன் பாய்ச் சந்தற்ற சத்தியர்க்குத்
சாவே பெருநோன் பாய்ச் சந்தற்ற சத்தியர்க்குத் தேவாரங் காலந் தியான மறம் - பாவம் விதிவிருத்தம் பேசுகைக்கு வேதா கமங்க ளதிசயிக்கு மேலுரைப்பா ரார். (இ-ள்.) சாவே பெருநோன்பு ஆய்ச் சந்து அற்ற சத்தியர்க்குத் தேவாரம் காலம் தியானம் அறம் பாவம் விதி விருத்தம் பேசுகைக்கு - தற்போதம்...
224. கால முடன்றேசந்திக்குக் கருமமுடற்
கால முடன்றேசந்திக்குக் கருமமுடற் கோலஞ் சமயங் குறிப்பறிதல் - சீலந் தலையோடு போனவுயிர் தான் போலத் தன்னோ டிலையாஞ் சிவனே யிவன். (இ-ள்.) காலமுடன் தேசம் திக்குக் கருமம் உடல் கோலம் சமயம் குறிப்பு அறிதல் சீலம் - இன்ன காலத்து இன்ன விரதஞ் செய்வதென்னும் காலமும், காசி முதலியன...
223. சாலோக மாதி தருஞ்சைவ சித்தாந்தி
சாலோக மாதி தருஞ்சைவ சித்தாந்தி பாலேகம் பார்க்கப் பணியுமவன் - மேலே யுருகித் திருவுளத்துக் குற்றபணி செய்வார் பெருமைக்கே துண்டோ பிற. (இ-ள்.) சாலோகம் ஆதி தரும் சைவ சித்தாந்தி பால் ஏகம் பார்க்கப் பணியும் அவன் மேலே -தன்னை வந்து அடைந்தோரது பக்தி பணிவிடைக் கேற்ப அவர்க்குச்...
222. அரிபிரம ரிந்திரர்க ளாதிகளார் தானச்
அரிபிரம ரிந்திரர்க ளாதிகளார் தானச் சரிவிரத்த னின்பத்தைச் சாற்றிற் - பரமசிவன் றானே சரிமீட்டுச் சாற்றுகிற்றான் றான் சரிவே றானாரை வேதமறி யா. (இ-ள்.) அரி பிரமர் இந்திரர்கள் ஆதிகளார் தானச் சரிவிரத்த னின்பத்தைச் சாற்றிற் - அரி பிரமர் இந்திரர் முதலிய தேவர்களது இன்பமெல்லாம்...