அறிவு பறிகொடுத்திவ் வாக்கையற மாறிப் பெறுதி யிழப்பு தியாப் பித்தி - னறிசென் றலையற்ற நீத்தமோ ராளற்ற கப்ப லுலைவுற்ற தோநிற்ப தோ. (இ-ள்.) அறிவு பறிகொடுத்து இவ்வாக்கை அறமாறிப் பெறுதி இழப்பு உதியாப் பித்தின் அறி சென்று - முன்னர் விடயாநந்தத்திற்குத் தமது அறிவைப் பறிகொடுத்தது...
ஒழுவிலொடுக்கம்
அருளவத்தைத் தன்மை
200. கால்வந்த வர்க்காட்டங் கைவந்த வர்க்காட்ட
கால்வந்த வர்க்காட்டங் கைவந்த வர்க்காட்ட மால் முந்தி வந்தவர் வாய்ப்பாட்டு - மேல் கொண்ட வாநந்த வுல்லாசத் தாச்சரிய மாரறிவா ரூனம்போற் காணு முலகு. (இ-ள்.) கால் வந்தவர்க்கு ஆட்டம் கை வந்தவர்க்கு ஆட்டம் மால் முந்தி வந்தவர் வாய்ப்பாட்டும்- பிறவி முடவராயிருந்து இடையில்...
199. குறும்பாட்டும் புன்சிரிப்புங் கூர்த்திமையா நோக்கும்
குறும்பாட்டும் புன்சிரிப்புங் கூர்த்திமையா நோக்கும் வெறும்போகஞ் சாய்ந்து விழினு - மறந்த திகைப்பும் விதிர்ப்புந் திமிர்ப்பும் விறைப்பு முகைப்புந் தெளிந்தறிதலும். (இ-ள்.) குறும்பாட்டும் புன்சிரிப்பும் கூர்ந்து இமையா நோக்கும் - தாம் அறிந்த பாட்டுகளுள் சில பாட்டான்...
198. நடை தளர்ந்து மெய்ம்மறந்து நாண மழிந்து
நடை தளர்ந்து மெய்ம்மறந்து நாண மழிந்து யுடறளர்ந்து கீழ்க்குரலிட் டூண்போய் - மடலெடுப்பாய்ச் சத்தாதி கெட்டுமனந் தாக்கற்றுச் சந்தழிந்த பித்தர்க்கு மாகா பிணி. (இ-ள்.) நடை தளர்ந்து மெய் மறந்து நாணம் அழிந்து உடல் தளர்ந்து கீழ்க்குரல் இட்டு ஊண் போய் - கருவிச்...
197. மலட்டுமக னீங்கி வரக்கண்ட தாய்தா
மலட்டுமக னீங்கி வரக்கண்ட தாய்தா லலத்தி மகிழு மதுபோ - லுலப்பிலாக் காலங் கழிந்ததையுங் காணாத்தைக் கண்டகளிப் பாலு மழுது சிரிப் பார். (இ-ள்.) மலட்டு மகன் நீங்கி வரக்கண்ட தாய் தால் அலத்தி மகிழும் அதுபோல் -நெடுநாள் மலடிருந்து பின்னர் அரிதாய்ப்பெற்ற புதல்வன் தன் மனைவிட்டு...
196. பேயைப் பெண் ணென்றிருந்தும் பித்தளைக்குப் பொன்றோற்று
பேயைப் பெண் ணென்றிருந்தும் பித்தளைக்குப் பொன்றோற்று மாயத்தூ ணுண்டுமன மாண்டு மயல் - போயத் திடுக்கமே பித்தாய்த் தெளிமயலா னாற்போ னடக்கு மருண் மேலிட்ட நாள். (இ-ள்.) பெண்ணை பேய் என்று இருந்தும் பித்தளைக்குப் பொன் தோற்றும் மாயத்து ஊண் உண்டு மனம் மாண்டு மயல் போய் - பெண்களைப்...
195. வேர்க்கும் விழித்ததும்பும் பொய்யறியின் மெய்வெதும்பி
வேர்க்கும் விழித்ததும்பும் பொய்யறியின் மெய்வெதும்பி யார்க்கும் விறைக்கு மருளுதிப்பின் - வாக்குமன நின்றுபரி பூரணமாய் நேயத்தே கார்க்கதமாய்க் கன்றிப் புளகி தமாங் காண். (இ-ள்.) வேர்க்கும் விழித்ததும்பும் பொய் அறியின் மெய்வெதும்பி ஆர்க்கும் விறைக்கும் - பொய்யாகிய கருவிகளை...
194. கருவி கழல வரைநோக்காஞ் சிந்தை
கருவி கழல வரைநோக்காஞ் சிந்தை பெருமூச்சாம் போதம் பிறியி - லருளாய் வெதும்பி யுடல் வெறுக்கு மின்பாய் விகள முதிர்ந்துறையு நாணுமொடுங் கும். (இ-ள்.) கருவி கழலவரை நோக்கு ஆம் சிந்தை பெருமூச்சு ஆம் போதம் பிறியில் - கருவிகள் நீங்கவே மலை மேல் நின்று நோக்குவோர்க்கு நிலத்தின்கண்...
193. உரையொடுங்கிற் போத முதிக்கு மொழிவே
உரையொடுங்கிற் போத முதிக்கு மொழிவே யருளா மதன் போக் கசையாப் - பரையோகம் போனாற் சுகாதீதம் புண்ணியர்க்குப் பொய்யு தியா தேனோர்க்குப் பல்விதமா கும். (இ-ள்.) உரையொடுங்கின் போதம் உதிக்கும் ஒழிவே அருள் ஆம் அதன் போக்கு அசையாப் பரையோகம் போனால் சுகாதீதம் -வாக்கினை மௌனமாக்கின்...
192. சாத்துவித மெட்டாய்த் தசவவத்தை யாய்த்தன்னை
சாத்துவித மெட்டாய்த் தசவவத்தை யாய்த்தன்னை நீத்தவனாய்த் தானாய்ப்பின் னேயமாய்க்-கூர்த்ததெல்லாஞ் சுத்த வவத்தைத் துவட்சித் துகளற்ற வத்துவிதர்க் கேதுமுதியா. (இ-ள்.) சாத்துவிதம் எட்டு ஆய்த் தச அவத்தை ஆய் தன்னை நீத்தவன் ஆய்த் தான் ஆய்ப் பின் நேயம் ஆய்க் கூர்த்தது எல்லாம்...