குறங்குகுத்திக்கொண்டு குறோக்கை கத்திக்கூட்டை மறந்தழைத்தாற் றூக்கம் வருமோ - வெறுங்கெடுவீர் தன்னை யழித்தெழுந்த சச்சிதா நந்தத்தை யுன்னி லொளித்துவிடா தோ. இ-ள். குறங்கு குத்திக்கொண்டு குறோக்கை கத்திக் கூட்டை மறந்து அழைத்தால் தூக்கம் வருமோ – பாயலில் படுத்துக்கொண்டு,...
ஒழுவிலொடுக்கம்
இயோகக்கழற்றி
100. வாலே முகமாய் வரவானை யேறினார்
வாலே முகமாய் வரவானை யேறினார் போலேயுன் போதமோ போய்த் தீண்டுஞ் - சாலப் பெருஞ்சிரிப்பாந் தன்னைப் பிடித்தாட்டும் பேயைத் தெரிஞ்சிருக்கத் தேடுஞ் செயல். (இ-ள்.) வாலே முகமாய் வர ஆனை ஏறினான் போலே உன் போதமோ போய்த் தீண்டும் - தான் கருதிய ஊருக்குச் செல்லத் தலைப்புறத்தைப்...
99. உபதேசப் பித்தோ வுபமானப் பித்தோ
உபதேசப் பித்தோ வுபமானப் பித்தோ விபரீத மோபழக்கோ வேறோ - தபசி நீ கண்மூடா விண்மூடத் தேடுங் கவுசனை போ லெண்மூடா யோகமிது வென். இ-ள். உபதேசப் பித்தோ உபமானப் பித்தோ விபரீதமோ பழக்கோ வேறோ தபசி நீ-உனக்குக் குரு சொன்ன உபதேசப் பித்தமோ? சாத்திரங் கூறிய உபமானப் பித்தமோ? உனது விபரீத...
98. சாக்கிரத்தே கேவலத்தைச் சார்ந்துவிட தத்துவத்தை
சாக்கிரத்தே கேவலத்தைச் சார்ந்துவிட தத்துவத்தை நூக்கியொழிப் பார்போ னுழைவதையு -நீக்கியே கண்ணாடி பார்த்த குரக்கறிவாய்க் காண்பதையு மெ (இ-ள்.) சாக்கிரத்தே கேவலத்தைச் சார்ந்துவிடத் தத்துவத்தை நூக்கி ஒழிப்பார்போல் நுழைவதையும்- சாக்கிரத்தில் அதீதத்தைப் பெறும்பொருட்டுத்...
97. நெய்யி னிழற்போ னிழலிற் புருடனைப்போற்
நெய்யி னிழற்போ னிழலிற் புருடனைப்போற் பொய்யில் விகற்பம் புகுவதுவுந் - துய்ய வொளியோசை யாகி யொடுங்குவதுந் தம்மைத் தெளியாதார் செய்யுஞ் செயல். (இ-ள்.) நெய்யில் நிழல் போல் நிழலில் புருடனைப் போல் பொய்யில் விகற்பம் புகுவதும்- நெய்யின் கண் தோற்றும் நிழலைப்போலும்,...
96. தத்துவமுட்டாக்காய்ச் சமாதியினைச் சார்போதப்
தத்துவமுட்டாக்காய்ச் சமாதியினைச் சார்போதப் பித்தனென்பார் பேரிற் பிழையுண்டோ - புத்திபோய்க் கம்பக் களிறு கட்டக் கல்லினார் காணுமிவ ரம்பரத்தை வந்துபிடிப் பார். (இ-ள்.) தத்துவம் முட்டாக்கு ஆய்ச் சமாதியினை சார் போதப் பித்தன் என்பார் பேரில் பிழை உண்டோ -தத்துவங்களை எல்லாம்...
95. கவிப்பயனு மாதனமுங் கண்சிமிட்டா நோக்குந்
கவிப்பயனு மாதனமுங் கண்சிமிட்டா நோக்குந் தவப்பகடி யாட்டங்காண் சார்வைத் - தவிர்க்கின் மறந்தறிய லாகா மலட்டறிவாய் வான்போ னிறைந்து துளும்பாம னில். (இ-ள்.) கவிப்பயனும் ஆதனமும் கண் சிமிட்டா நோக்கும் தவப்பகடி ஆட்டம் சார்வைத் தவிர்க்கின்- யோக நூலைக் கற்றுக்கொண்டு பிறர்க்கு...
94. அறிவடங்கா வாயு வடங்கவசை வற்றுத்
அறிவடங்கா வாயு வடங்கவசை வற்றுத் தறியிருந்தாற் போலச் சமாதி - பெறுகி னடந்த குருட்டூம னஞ்சருந்திப் பாழூர்க் கிடந்தகுழிப் புக்கதினுங் கேடு. (இ-ள்.) அறிவு அடங்கா வாயு அடங்க அசைவு அற்றுத் தறி இருந்தாற்போலச் சமாதி பெறுகில்- தமது அறிவால் அதன் இச்சைப்படி சென்று அடங்காத...
93. அட்டமா சித்திகளு மத்துவா மூர்த்திகளுங்
அட்டமா சித்திகளு மத்துவா மூர்த்திகளுங் கிட்டிலதற் கங்கங்கே கீழ்மேலாய் - விட்டு வரும்போதுந் துக்கமாய் வந்து வந்து மாய்ந்து பெரும்பாவஞ் செய்யப் பெறும். (இ-ள்.) அட்டமாசித்திகளும் அத்துவா மூர்த்திகளும் கிட்டில் -அக்கிரியா யோகத்தால் அணிமா முதலிய அட்டமா சித்திகளும் தமக்குக்...
92. சரிதை கிரியைகளைச் சற்றாக்கிச் சாகாக்
உ திருச்சிற்றம்பலம் மூன்றாம் அதிகாரம் இயோகக்கழற்றி சரியாதியில் நிற்போர்களுள் ஓரொருவர் முன்விட்ட குறையால் ஞானத்திற்குப் பக்குவராய் வருவார்கள். அவர்கட்குத் தற்போதத்தை ஒழித்து ஞானம் வருவித்தற் பொருட்டு அத்தற்போதத்தால் செய்யும் சரியாதிகளைப் போதனைகளால் நீக்க வேண்டும்....