ஒழுவிலொடுக்கம்

சத்திநிபாதத்துத்தமரொழிவு

91. அறிவுக் கறிவென்னு மாகமங்கள் சுத்த

அறிவுக் கறிவென்னு மாகமங்கள் சுத்த வறிவென்னும் வேதத்தி னந்தம் - பிறியா நிலைக்குச் சரியாகு நீயென்றா னானென் றலைக்கு மரிபிரமரை. (இ-ள்.) அறிவுக்கு அறிவு என்னும் ஆகமங்கள் வேதத்தின் அந்தம் சுத்த அறிவு என்னும் பிறியா நிலைக்குச் சரி ஆகும்- சச்சிதாநந்த சிவத்தை உயிராகிய...

read more

90. அறிந்ததுவாய் நின்ற வறியாமை கண்டு

அறிந்ததுவாய் நின்ற வறியாமை கண்டு மறந்தறியார் வாழாது வாழ்ந்த - வெறும்பாழ் விளைந்தசுகஞ் சொல்லில் வெளியைப் படியா லளந்தறியு மாபோல வாம். (இ-ள்.) அறிந்து அது ஆய் நின்ற அறியாமை கண்டு மறந்து அறியார் வாழாது வாழ்ந்த- முப்பத்தாறு கருவிகளையும் நீங்கி அவற்றின் முடிவில் நின்ற தம்மை...

read more

89. தன்னையிழப் பார்க்கென்ன சார்வூழி சங்கார

தன்னையிழப் பார்க்கென்ன சார்வூழி சங்கார மென்னிலொளித் தெங்கே யிருக்கலா - முன்னே புலிபார்க்கப் போனகதை போலிமையா நாட்டஞ் சலியாமன் மூடுந் தனை. (இ-ள்) தன்னை இழப்பார்க்குச் சார்வு என்ன ஊழி சங்காரம் என்னில் ஒளித்து எங்கே இருக்கல் ஆம் - தற்போதம் ஒழிப்பார்க்கு மற்றைச்சார்புகள்...

read more

88. பொய்போல மெய்யு மறியப் பெறாப்போக

பொய்போல மெய்யு மறியப் பெறாப்போக சையோகர்க் கொன்றோடுஞ் சார்பில்லை - துய்ய விழிக்கு ளுதித்த விரிகதிர்போற் றம்மை யழித்ததுவே யாச்சரிய மாம். (இ-ள்.) பொய்போல மெய்யும் அறியப்பெறாப் போக சையோகர்க்கு ஒன்றோடும் சார்பு இல்லை - முன்னர்ப் பொய்யாகிய உடலத்தோடுங் கூடியபோது...

read more

87. அறிவுமறி வானு மறியா மலையு

அறிவுமறி வானு மறியா மலையு மறியிற் றடையே தவர்க்குப் - பிறிவரோ வாகாயஞ் சூறைகொளி லஞ்சி யடுக்களைக்குட் போகாது போலாம் பொருள். (இ-ள்.) அறிவும் அறிவானும் அறியா மலையும் அறியின் தடை ஏது அவர்க்குப் பிறிவரோ - உயிர்க்குயிராய் உள்ளும்புறம்பும் ஓரணுவளவேனும் விட்டு நீங்காதிருந்து...

read more

86. உடல் பொறிக ளுட்கரணத் தோடு குணம் வாயு

உடல் பொறிக ளுட்கரணத் தோடு குணம் வாயு விடவிடவே நாதாந்த வீடு - நடுநிலையாய்த் தன்னொழிவும் பேரின்ப சாகரமுஞ் சந்தழிவா ரென்னபடார் கண்டறியாரே. (இ-ள்.) உடல் பொறிகள் உட்கரணத்தோடு குணம் வாயு விடவிடவே நாதாந்த வீடும்- உடலமும் பொறிகளும் அந்தக்கரணங்களும் அவற்றுடனே குணங்களும் பிராண...

read more

85. அருணனு தயம்போற் றான் வீழ்வா ராசை

அருணனு தயம்போற் றான் வீழ்வா ராசை பெருகுவபோற் கப்பற் பிழைத்துக் - கரை காணு மாபோற் சிறையு மரும்பிணியு நீங்கியிடு மாபோ லதிசயம்போ லாம். (இ-ள்.) அருணன் உதயம் போல் தாம் வீழ்வார் ஆசை பெருகுவபோல் கப்பல் பிழைத்துக் கரைகாணும் ஆறு போல்-மழையிருளில் நெறிதெரியாது உழல்வோர்க்குச்...

read more

84. புளிசேர் பழமானாற் போற்புறம்போ டுள்ளின்

புளிசேர் பழமானாற் போற்புறம்போ டுள்ளின் முளை தானும் வேறாய் முளைபோய்த் - துளைமாண்ட வூசிக்குப் பாச மொழிந்தது போ லொப்பாருக் காசைக்கே டானந்த மாம். (இ-ள்.) புளி சேர் பழம் ஆனால் போல் புறம்போடு உள்ளின் முளைதானும் வேறு ஆய் முளைபோய்- முன்னர்ப் பிஞ்சாய் இருந்தபோது ஒடும் வித்தும்...

read more

83. வெண்ணெயுறு பாவையர்க்கு ஞானம் விளக்கின்மே

வெண்ணெயுறு பாவையர்க்கு ஞானம் விளக்கின்மே லண்ணின் மயிர் பஞ்சாகு மாசையிலை - கண்ணீ ரொழுகும் பொழுதறியா துள்ளுருகி விம்மி யழுது சிரிப் பார்புளகமாம். (இ-ள்.) வெண்ணெய் உறு பாவையர்க்கு ஞானம் விளக்கின் மேல் அணில் மயிர் பஞ்சு ஆகும் ஆசை இலை- வெண்ணெயினைப் பொருந்தாநின்ற ஓர் பாவை...

read more

82. மரப்பாவை போலுடம்பின் வாதனையை மாற்றிக்

மரப்பாவை போலுடம்பின் வாதனையை மாற்றிக் கரித்தீக் கவர்வதுவாங் காமித் - திருத்த மனைபொதுவின் மண்டபமாம் வானோர்கள் வாழ்வுங் கனவெனவே தோன்றியிடுங் காண். (இ-ள்.) மரப்பாவை போல் உடம்பின் வாதனையை மாற்றிக் கரித்தீக் கவர்வது ஆம் - மரத்தினை ஓர் பாவை வடிவாக்குதல் போல், அருள்...

read more