ஒழுவிலொடுக்கம்

விரத்தி விளக்கம்

159. அறிந்து பற்றி நின் றழுந்து மற்ப வறிவை

அறிந்து பற்றி நின் றழுந்து மற்ப வறிவை அறிந்து சுத்தி யேபேரறிவாய் - நிறைந்து சிவந் தோயாம னின்றது போற் றோற்றமுதலைந்துடனுந் தோயாமற் சுத்தத் துறவு. அறிந்து பற்றி நின்று அழுந்தும் அற்ப அறிவை அறிந்து சுத்தியே பேர் அறிவு ஆய்-பஞ்ச விடயங்களையும் ஞானேந்திரியங்களால் அறிந்து,...

read more

158. நினைப்பு மறப்பற்று நிறைந்த வறிவா

நினைப்பு மறப்பற்று நிறைந்த வறிவா யனைத்துடனு நின்றம் பரமாய்த் - தனக்கருளித் தன்னாந் தத்தைத் தனக்களித்த சர்க்கரையே யன்னானுக் கின்னவைமூன் றாம். (இ-ள்.) நினைப்பு மறப்பு அற்று நிறைந்த அறிவு ஆய் அனைத்துடனும் நின்று அம்பரம் ஆய்த் தனக்கு அருளி- நினைப்பு மறப்பாகிய சகலகேவலங்களை...

read more

157. சிற்றறிவனாய்மறைப்பைச் சேர்ந்தவடிவொண்படிகம்

சிற்றறிவனாய்மறைப்பைச் சேர்ந்தவடிவொண்படிகம் பற்றுகினு மொன்றாகாப் பான்மைபோ - லுற்ற வுருவ சொரூப சுபாவ முனக்கு வருமடைவு சொன்னோமதி. (இ-ள்.) சிற்றறிவன் ஆய் மறைப்பைச் சேர்ந்தவடிவு ஒண்படிகம் பற்றுகினும் ஒன்று ஆகாப் பான்மைபோல்- கிஞ்சிக்கிய அறிவனாய்ச் செம்பில் களிம்பு போன்ற ஆணவ...

read more

156. உனக்குமெய்யாய்த் தோன்றி யொழித்துவிடும்பாசம்

உனக்குமெய்யாய்த் தோன்றி யொழித்துவிடும்பாசம் வினைச்சடமே யென்னில் விடம்போ - லுனைச்சுழற்று மானாலுந் தன்னை யறியாத துன்னறிவு தானாகு ஞானத் தடை. (இ-ள்.) உனக்கு மெய்யாய்த் தோன்றி ஒழித்துவிடும் பாசம் வினைச்சடமே என்னில் விடம்போல் உனைச் சுழற்றும் ஆனாலும்- உனக்குத் தோன்றும்போது...

read more

155. பாசங் கழன்றாற் பசுவுக் கிடம்பதியா

பாசங் கழன்றாற் பசுவுக் கிடம்பதியா மூசல் வடங்கழன்ற தொவ்வாதோ - நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்கு மாம். (இ-ள்.) பாசம் கழன்றால் பசுவுக்கு இடம் பதி ஆம் ஊசல் வடம் கழன்றது ஒவ்வாதோ-உயிர்ச்சார்வுபொருட்சார்வு ஆகிய இருவகைச் சார்வும், இச்சார்வுகளை...

read more

154. வாசிக்குச் சாவீரர் வைதாற் பொறாதது போ

வாசிக்குச் சாவீரர் வைதாற் பொறாதது போ லாசைக்கே டர்க்கிதுவா மட்டதென - நேசித்த வொட்டையைப் போல் வார்க்கா முடம்பார வூண்பழகும் பெட்டருக்கீ தாகாப் பிழை. (இ-ள்.) வாசிக்குச் சாவீரர் வைதால் பொறாதது போல் ஆசைக் கேடர்க்கு இது ஆம்- வாசி என்ற வார்த்தைக்கு மனம் பொறாது...

read more

153. அறுசமயத் தோர்க்கு மறுதியிட்ட கூடற்

அறுசமயத் தோர்க்கு மறுதியிட்ட கூடற் துறவா யவாவறுத்த தூய்மை - பிறவா முடிகளச முத்தி முயற்சியெல்லா மூத்த கடைகரும நாசமிது காண். (இ-ள்.) அறு சமயத்தோர்க்கு அறுதி இட்ட கூடல் துறவு ஆய் அவாஅறுத்தல் தூய்மை - அறுவகைச்சமயத் தோர்க்கும் வீடடைதற்கு மட்டிட்டு வைத்த பொதுநெறி யாதெனின்,...

read more

152. அறிந்தவிடத் தின்பதுன்ப மாகா ததுவும்

உ திருச்சிற்றம்பலம் ஆறாம் அதிகாரம் விரத்தி விளக்கம் இங்ஙனம் சரிதாதிகளை நீத்துநின்றார் ஆயினும், உள் துறவு இல்லார்க்கு ஞானம் விளங்காது ஆகலின், இவ்வதிகாரத்தினுள் துறவு விளக்கங்கூறி உட்டுறவின் இலக்கணம் அறிவித்தார் ஆகலின், இவ்வதிகாரத்திற்கு விரத்தி விளக்கமென்று...

read more