சுகிக்கில்லைத் துக்கஞ் சுடுகாடு சொர்க்க மகத்துக்குஞ் சொர்க்கநர காய்ந்தார் - சுகிப்பதுவு மத்துவி தாநந்தர்க் காகார மற்றது பத்தி செய்வார்க் கேற்கும் பயன். (இ-ள்.) சுகிக்குத் இல்லை துக்கம் சுடுகாடு சொர்க்கம் அகத்துக்கும் சொர்க்கம் நரகு ஆய்ந்தார் சுகிப்பதுவும் அத்துவித...
ஒழுவிலொடுக்கம்
அருளவத்தைத் தன்மை
220. பெருநோவுக் கேயென்னப் பெற்ற துடற்போக
பெருநோவுக் கேயென்னப் பெற்ற துடற்போக நரகேழு மூட்டுமிது நாஞ்செத்- துருவத்துத் தாமல்லாற் போகிப்ப தல்லவது வன்பர்பதங் காவலாட் கைத்தளை போற் காண். (இ-ள்.) பெரு நோவுக்கே என்னப் பெற்றது உடல் போகம் நரகேழும் ஊட்டும் இது நாம் செத்து உருவத்துத் தாம் அல்லால் போகிப்பது அல்ல- உடலாகிய...
219. தண்டு குடை யாளராய்ச் சாதுரங்கப் பேரரசாய்த்
தண்டு குடை யாளராய்ச் சாதுரங்கப் பேரரசாய்த் தொண்டர் குழாம் போற்றச்சுகித்தாலு - முண்டுசுத்தர் போகத்தா ரோசுடர்போற் பொய்ப்போக மெய்ப்பெருக்காய்ச் சாகப்போ வார்கடன்றீர்த் தல். (இ-ள்.) தண்டு குடை ஆளர் ஆய்ப் சதுரங்கம் பேர் அரசு ஆய்த் தொண்டர் குழாம் போற்றச் சுகித்தாலும் உண்டு...
218. அவரவரைப் போலிருப்பர் தாமவரா கார்போ
அவரவரைப் போலிருப்பர் தாமவரா கார்போ லிவரவர்க்கொப் பில்லை யெனினு - முவமை சொலின் வேசிபணம் வெய்யோன் வீணை வெளிவிசிறி யாசியர்போ லென்கினுமா வர். (இ-ள்.) அவர் அவரைப்போல் இருப்பர் தாம் அவர் ஆகார்போல் இவர் அவர்க்கு ஒப்பு இல்லை எனினும் உவமைசொலின்- குடும்பத்தோடு கூடியிருந்தும்...
217. அஞ்சனக்கண் ணாளர்க் கருநிதியந் தோன்றுவபோ
அஞ்சனக்கண் ணாளர்க் கருநிதியந் தோன்றுவபோ னஞ்சலகை மாற்றியதி னாணுவர்போல் - வெஞ்சாப வீடுபோற் றோன்று மருண் மேலிட்டால் விப்பிரட்டா மோடையின் மண் டூகமொப்போர் க்கு. (இ-ள்.) அஞ்சனக்கண் ஆளர்க்கு அருநிதியம் தோன்றுவபோல் அஞ்சலகை மாற்றியதி னாணுவர்போல் வெஞ்சாப வீடுபோற் றோன்றும்...
216. மூர்க்க னனாசாரி மூடனெனப் பண்டிதனாம்
மூர்க்க னனாசாரி மூடனெனப் பண்டிதனாம் மேற்குலமா மாசார வித்ததெனப் - பார்க்கி லளவைக் களவாகி யப்பாலா ஞானி தெளிவைத் தெளியாத தென். (இ-ள்.) மூர்க்கன் அனாசாரி மூடன் எனப் பண்டிதன் ஆம் மேல் குலம் ஆம் ஆசார வித்து என -உலக நடை சமய நடைகளில் நிற்போர் ஞானிநடையைப் பார்த்து, தமது...
215. ஞானிக் குலகநடை யென்று நாம் பார்க்கிற்
ஞானிக் குலகநடை யென்று நாம் பார்க்கிற் சீனக்கண் ணாடியொடு தீபமுமா - மேனோர்க்கும் விப்பிரட்ட மேபோல வேறாம் விகாரியோ வப்பராக் கன்றியறி யான். (இ-ள்) ஞானிக்கு உலகநடை என்று நாம் பார்க்கின் சீனக் கண்ணாடியொடு தீபமும் ஆம் - ஞானியினது நடையை உலகரது சாதிநடைபோலென்று யாம் பார்ப்போம்...
214. காமாதி விட்டுக் கரமே கலமாகிப்
காமாதி விட்டுக் கரமே கலமாகிப் பூமீதே கைகாலைப் போர்த்துறங்கி - நாமகுணஞ் சாதி கருமமெனும் வாதனையிற் றாக்கற்றார்க் கேது சமயமென லாம். (இ-ள்.) காமம் ஆதி விட்டுக் கரமே கலம் ஆகிப் பூமீதே கை காலைப் போர்த்து உறங்கி- காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்களை யெல்லாம் விட்டு நீங்கி,...
213. தன்னையரு ளாலறிந்து தானறிந்த தெல்லாம் போ
தன்னையரு ளாலறிந்து தானறிந்த தெல்லாம் போ யிம்மைப் பெருவாழ்வை யெய்தினர்க்கு - முன்னே நடந்தறிந்த போத நசிப்பே யிருக்கு மிடம்புறங்கா டென்ப திலை. (இ-ள்.) தன்னை அருளால் அறிந்து தாம் அறிந்தது எல்லாம் போய் இம்மைப் பெருவாழ்வை எய்தினர்க்கு- கருவிகள் முப்பத்தாறையுங் கடந்து தம்மை...
212. தருவனமென் றண்டு குடை சாயமரையாய் வாழு
தருவனமென் றண்டு குடை சாயமரையாய் வாழு நரவனமென் மேல்கீழ் நடுவென் - பரமசிவன் றாக்கற் றதுபோ லருள் சிவனைச் சாராபோல் றாக்கற்றார்க் கெங்குஞ் சமன். (இ-ள்.) தருவனம் என் தண்டு குடை சாயமரை ஆய் வாழும் நரவனம் என்மேல் நடு கீழ் என் -தருக்கள் நெருங்கிய சோலையாயின் என்னை,...