கண்மணியினாகாய நீழல் கலந்தாற்போல் உண்மையை நீ யுண்டென் றெனையுணர்த்தித் - துண்ணெனவே பார்த்திருந்தசித்திரம் போற் பார்த்தானை நாம்பாவித் தோத்திரஞ்செய் யாப்பிறவாச் சொல். இத்திருவெண்பாவின் அருத்தம் இந்நூலினை நன்குணரும் நெறியினது நல்லறிவாளர்க்குத் தானே விளங்கும் எனக்கொள்க....
ஒழுவிலொடுக்கம்
நிலையியல்பு
252. கருப்ப நிலத்தைக் கரண்டு திரி வார்க்குச்
கருப்ப நிலத்தைக் கரண்டு திரி வார்க்குச் சருக்கரையே வாயிற் சனித்தாங் - கிருத்திவிடு மெந்தலைமை யென்பிரா லீனர்வாக் கென்னவே தந்தலைமை மாண்ட தலம். (இ-ள்.) கருப்ப நிலத்தைக் கரண்டு திரிவார்க்குச் சருக்கரையே வாயில் சனித்தாங்கு இருத்திவிடும் -சுவையை விரும்பிக் கரும்பறுத்தொழித்த...
251. கருவியுதிப் பிற்சகல கேவலத்தைக் காட்டி
கருவியுதிப் பிற்சகல கேவலத்தைக் காட்டி யருளுதிப்பு மங்கது போலாக்கி - யிரவுபகற் தாக்காத சுத்தத் தலத்து நாம் வைக்க நீ யாக்கா தெமக்குப் பரம். (இ-ள்.) கருவி உதிப்பின் சகல கேவலத்தைக் காட்டி அருள் உதிப்பும் அங்கு அதுபோல் ஆக்கி- கருவிகள் முப்பத்தாறுங் கூடிநின்ற சாக்கிரத்தில்...
250. தாமருந்தல் போலத் தமைச்சிவனுக் கூணாக்கித்
தாமருந்தல் போலத் தமைச்சிவனுக் கூணாக்கித் தாமருளா லுண்டுபரை தாமாகித் - தாமழிய வஞ்செழுத்தா லர்ச்சித் தடியார்க் கடிமை செயிற் பஞ்சமலக் கொத்தறுமப் பா. (இ-ள்.) தாம் அருந்தல்போலத் தமைச் சிவனுக்கு ஊண் ஆக்கித் தாம் அருளால் உண்டு பரை தாம் ஆகித் தாம் அழிய- தமக்கு ஊணாயிருந்த...
249. அருளும் பரையு மருக்கன்மதி போன்ற
அருளும் பரையு மருக்கன்மதி போன்ற விரவுபக லற்ற விடத்தே - பரமநிலை சத்திக் கழற்றியிலே சச்சிதா நந்தமய சுத்தநிலை நீயற்றது. (இ-ள்.) அருக்கன் மதிபோன்ற அருளும் பரையும் பகல் இரவு அற்ற இடத்தே பரமநிலை - அருக்கனும் மதியும்போன்ற அருளும் பரையும் ஆகிய பகலும் இரவும் அற்றவிடத்தே...
248. நடந்ததெல்லா நீயே நடப்பழிய நின்ற
நடந்ததெல்லா நீயே நடப்பழிய நின்ற விடஞ்சிவ நீ யென்றிருக்க வெண்ணி - லடங்கின் மயக்கி மலமழுத்து மாயையிது வாரா வயிர்ப்பருளா லாஞ்சிவயோ கம். (இ-ள்.) நடந்தது எல்லாம் நீயே நடப்பு அழிய நின்ற இடம் நீ சிவம் என்று இருக்க எண்ணில் அடங்கின் மயக்கி மலம் அழுத்தும்- கருவிகளை இது இது...
247. அறிந்தழுந்தி யாராய்ந் தகம்புறமாய்த் தேடி
அறிந்தழுந்தி யாராய்ந் தகம்புறமாய்த் தேடி மறந்தவனாய்த் தானாய் மயங்கிப் - பிறிந்து சுகதுக்க மாய்ப்பதறிச் சுட்டுத் தொழில் போய்ப் பகைகெட்டது துறவப் பா. (இ-ள்.) அகம் புறம் ஆய் ஆராய்ந்து தேடி அறிந்து அழுந்தி மறந்தவன் ஆய்த் தான் ஆய் மயங்கிப் பிறிந்து சுக துக்கம் ஆய்ப் பதறி -...
246. போதப் புரவி புருட னதிலைந்து
போதப் புரவி புருட னதிலைந்து வீதிப் பவனி விறிசாகும் - போதப் புரவியரு ளேறினாற் போக்குவர வற்ற பரமசுக மாங்காணப் பா. (இ-ள்.) போதப் புரவி புருடன் அதில் ஐந்து வீதி பவனி விறிசு ஆகும் - போதமாகிய அரையன் புருடனாகிய புரவிமேல் ஏறிக்கொண்டு பஞ்சேந்திரிய வீதிகளில் விடயங்களாகிய...
245. தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போயருள் கழன்று
தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போயருள் கழன்று சுத்தபரை யாய்த்தன் சுதந்தரம்போய்ச் - சத்தி யொழிவிலே போதம்போ யொன்றாகா வொன்றி னழிவிலே இன் பவதீ தம். (இ-ள்.) தத்துவம் போய்க் கேவலம் போய்த் தான் போய் அருள் கழன்று சுத்த பரை ஆய்த் தன் சுதந்திரம் போய்ச்சத்தி ஒழிவிலே போதம்...
244. சாக்கிரத்திற் போதச் சலனையெல்லாஞ் சொப்பனம்போ
சாக்கிரத்திற் போதச் சலனையெல்லாஞ் சொப்பனம்போ லாக்கு மருட்போத ராகுவோர் - நீக்கும் பரையோகர் சுத்தர் பரமசுகா நந்தர் துரியகதி யின்பு கடந் தோர். (இ-ள்.) சாக்கிரத்தில் போதச்சலனை எல்லாம் சொப்பனம்போல் ஆக்கும் அருட்போதர் ஆகுவோர் - சாக்கிராவத்தையில் தோன்றும் போதச்...