ஒழுவிலொடுக்கம்

பொதுவிலுபதேசம்

34. மாயா விகார மதுபானம் போன்று மயக்

மாயா விகார மதுபானம் போன்று மயக் கோயாத துன்னா லொழியுமோ - நீயதுவாய்ப் போகாம லாடும் பவுரியவன் பொய்க்காட்சி யாகாது போலே யறி. (இ-ள்.) மாயாவிகாரம் மதுபானம் போன்று மயக்கு ஓயாது அது உன்னால் ஒழியுமோ - முற்கூறிய அவத்தை மாயாகாரியமாகிய கருவிக்கூட்டங்களினது சேட்டை, அது, மதுபானங்...

read more

33. அஞ்சுதொழி லாவதுவே யஞ்சவத்தை கிஞ்சலிலா

அஞ்சுதொழி லாவதுவே யஞ்சவத்தை கிஞ்சலிலா வஞ்சிடத்துங் கொள்ளிவட்ட மாகவே - பஞ்சவன்னம் வைத்த படிகம்போன் மாறாதுனை மயக்கல் சித்திரக்கூத் தாகத் தெளி. (இ-ள்.) அஞ்சுதொழில் ஆவதுவே அஞ்சு அவத்தை கிஞ்சல் இலா அஞ்சு இடத்தும் கொள்ளிவட்டம் ஆகவே -சிவனது பஞ்சகிருத்தியங்கள் யாவை எனின்,...

read more

32. மண்ணாதி சத்தாதி வாக்கு மனமாதி

மண்ணாதி சத்தாதி வாக்கு மனமாதி கண்ணாதி நாதாந்தங் கண்டகன்ற - வுண்மை தனையணு வென்றேயுணர்த்துஞ் சார்பினையுங்கண்ட வுனையறிவென் றுள்ளே யுணர். (இ-ள்.) மண் ஆதி சத்தாதி வாக்கு மனம் ஆதி கண் ஆதி நாதாந்தம் கண்டு அகன்ற உண்மைதனை - பிருதிவி முதலிய பஞ்சபூதங்களும், சத்தாதி விடயங்களும்,...

read more

31. கடல்சிவநீ ரான்மா வுப்புமலங் கன்ம

கடல்சிவநீ ரான்மா வுப்புமலங் கன்ம மடர்வாயுப் போத மலைகா - ணிடைவிடா தவ்வாதி யுட்கரண மைம் பொறியிற் பம்பரம்போ லிவ்வா றுனைச்சுழற்று மெண் (இ-ள்.) கடல் சிவம் நீர் ஆன்மா உப்பு மலம் அடர் வாயு கன்மம் அலைபோதம் - கடல்போலுஞ் சிவம், அதனுள் நீர்போலும் ஆன்மா, அந்நீருள் பிரிபடா திருந்த...

read more

30. பூரணவா நந்தமாந் தானோ புறம்புபால்

பூரணவா நந்தமாந் தானோ புறம்புபால் வாரியின்மீன் போன்ற மலவாழ்வைப் - பாரீ ருதியாது நின்ற வொளியையிரு ளாக்கு மது காணு மக்கினித்தம் பம். (இ-ள்.) பூரண ஆநந்தம் ஆம் தானோ புறம்பு பால் வாரியில் மீன் போன்ற மல வாழ்வைப்பாரீர் - உள் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்று கூறப்பட்ட...

read more

29. தன்னையறி வார்க்கெதிருந் தானும் பயனுமிலை

தன்னையறி வார்க்கெதிருந் தானும் பயனுமிலை யென்னிற் சிவனையறி வென்போமோ - சின்னாத தீதகற்று மாற்றொளிபோற் றேய்ந்து சிவமாயிருக்கப் போதகத்தை நாமொழிவிப் போம். (இ-ள்.) தன்னை அறிவார்க்கு எதிரும் தானும் பயனும் இலை என்னின் சிவனை அறி என்போமோ- கருவிகள் முப்பத்தாறையும் நீங்கித் தன்னை...

read more

28. விடாதவத்தை மூடி விடம் புசித்தாற் போலச்

விடாதவத்தை மூடி விடம் புசித்தாற் போலச் செடாதிகளுஞ் சேதனனுஞ் சேர்ந்து -படாதுபடு மச்சைக் கழற்றி னருள்வழிநீ யவ்வழியு னிச்சைப் பொருண்மலமென் றெண். (இ-ள்.) விடாது அவத்தை மூடி விடம் புசித்தால் போலச் செடாதிகளும் சேதனனும் சேர்ந்து படாதுபடும்- அணுவளவேனும் இடைவிடாது அவத்தைகள்...

read more

27. உனையுணர்த்திற் பாச முதவி யுடையோன்

உனையுணர்த்திற் பாச முதவி யுடையோன் றனையுணர்த்தி னீயே தலமாங் - கனலை விற்கிடமாய்க் காணிலதன் வெம்மையை வேறாக்கி யறியகிலாப் போலது நீ யாம். (இ-ள்.) உனை உணர்த்தின் பாசம் உதவி உடையோன் தனை உணர்த்தின் நீயே தலம் ஆம்- பசுவாகிய உன்னை அறிவிக்குமிடத்தும், உன்னை அநாதியிலே மறைத்து...

read more

26. எட்டுருவு மைந்தொழிலு மிச்சைவடி வும்பயனுஞ்

எட்டுருவு மைந்தொழிலு மிச்சைவடி வும்பயனுஞ் சுட்டரிய பூரணமுஞ் சுட்டுதலு - நிட்டைகளு முன்னிழப்பி லின்ப முதித்தொடுங்கு மொன்றிரண்டும் தன்னருட்கே யாமத் தனை. (இ-ள்.) எட்டு உருவும் ஐந்தொழிலும் இச்சைவடிவும் பயனும் சுட்டரிய பூரணமும் சுட்டுதலும்- பிரபஞ்சம் எல்லாம் ஓர் வடிவமாய்க்...

read more

25. உதியா துளதாகி யோங்கிப்பேராம

உதியா துளதாகி யோங்கிப்பேராம லதிசூக்கு மங்குறைந்தா காமற் - பதையாத வாகாய முங்காலும் போல வசைவற்ற தேகாண் பரிபூரணம். (இ-ள்.) உதியாது உளது ஆகி ஓங்கிப் பேராமல் அதி சூக்குமம் குறைந்து ஆகாமல்- தான் ஒன்றினால் உற்பத்தியாகாது எக்காலமும் உள்ளதாய், கருவிகள் முப்பத்தாறையும்...

read more