தந்தரகலை மந்த்ரகலை சார்பழுந்தச் சாற்றுமது மந்தர சரியாதி மார்க்கமிது - முந்தைத் தபதி விரத்தியரைச் சார்பழியச் சாற்று முபதேச மென்றே யுணர். (இ-ள்.) தந்திரகலை மந்த்ரகலை சார்பு அழுந்தச்சாற்றும் அது மந்த்ர சரியையாதி மார்க்கம் - குண்டமண்டல வேதிகாதிகளைக்கூறுந் தந்திரகலைகளும்,...
ஒழுவிலொடுக்கம்
பொதுவிலுபதேசம்
12. தாக்கற்ற பூரணத்திற் சந்தற்ற தம்மைமலம்
தாக்கற்ற பூரணத்திற் சந்தற்ற தம்மைமலம் நீக்குந் துயரகல நேசித்தோர் – பார்க்கும் வழிபலநாம் பைமறித்த வாறு நீ மாளா வொழிவிலொடுக்க முரைப்போம். (இ-ள்.) தாக்கு அற்ற பூரணத்தில் சந்து அற்ற தம்மை மலம் நீக்கும் துயர் அகல நேசித்தோர் - எல்லாவற்றோடும் கூடி நின்றும் அவைகள் ஒன்றோடும்...
11. சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து
சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து வைத்து வழி காட்டு மறைப்புலவன் – சுத்தன் றமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பா னெமக்கருளிச் செய்த திது. (இ-ள்.) சத்திய நிர்வாணத்தால் தற்போதத் தாக்கு அறுத்து வைத்து வழிகாட்டும் – சத்திய நிர்வாணத்தீக்கையால் எனது போதத்தை...
10. சாயா புருடனைப்போ லாநந்த மேதடித்த
சாயா புருடனைப்போ லாநந்த மேதடித்த மாயா வயிரி மனமாண்ட – நேயவுரை ஆவேசர் வீர ரரசர் மடலாளர் சாவாநந் தர்க்குச் சரி. (இ-ள்.) சாயா புருடனைப்போல் ஆநந்தமே தடித்த மாயா வயிரி மனம் மாண்ட நேய உரை- வடிவம் இன்றிய ஆகாயத்தில் வடிவம் போல் தடித்த சாயா புருடனைப்போல் வடிவம் இன்றிய...
9. இருளிற் சுடரென்ன விந்திரவி யென்ன
இருளிற் சுடரென்ன விந்திரவி யென்ன வருளைக் கடந்தபரா நந்தர் - திருவாக் கமுதமழை யம்பரச்சொ னன்னிமித்த மாங்கே மமதையிரா தென்றே மதி. (இ-ள்.) இருளில் சுடர் என்ன இந்து இரவி என்ன அருளைக் கடந்த பராநந்தர் திருவாக்கு- பூத இருளின்கண் தோற்றும் விளக்குப்போலும் சந்திரன் போலும் சூரியன்...
8. தேனுண் டுமிழுந் திறம்போற் சிவாநந்த
தேனுண் டுமிழுந் திறம்போற் சிவாநந்த மோனந் துளும்பி மொழிகாலத் தேநின்று தோன்றிருது போலுமொன்றைச் சுட்டாது கேட்பவர்கட் கான்ற தவம் வேத மது. (இ-ள்.) தேன் உண்டு உமிழும் திறம்போல் சிவாநந்த மோனம் துளும்பி மொழி காலத்தே – தேனை நிறைய உண்டு அதனை மீட்டும் கக்குந்தன்மை போல்,...
7. பொய்போகப் போகப் பொருந்திப் பொருடானாஞ்
பொய்போகப் போகப் பொருந்திப் பொருடானாஞ் சையோக போக தரங்கத்தினையும் பரிபாகங் கண்டு பதையாமற் பார்க்கும் குருவேகாண் ஞானக் குரு. (இ-ள்.) பொய்போகப் போகப்பொருந்தி - பொய்யாகிய கருவிகள் முப்பத்தாறும் நீங்க நீங்கவே அவைகளைப்பகுத்தறிந்து நீங்கி நின்ற அறிவு தானென்று தன்னை அருளால்...
6. தன்னறிவு சாட்சியல்லாற் சாயுச்சி யப்பயனைச்
தன்னறிவு சாட்சியல்லாற் சாயுச்சி யப்பயனைச் சொன்ன பிழை கெட்டேன் றொலைப்பரோ – முன்னே நடவா வழியொருவன் சொல்ல நடந்து தடுமாறி நொந்தறியா தார். (இ-ள்.) தன் அறிவு சாட்சி அல்லால் சாயுச்சியப் பயனைச் சொன்ன பிழை கெட்டேன் தொலைப்பரோ- சிவாநுபவம் நன்றாய் விளங்கிற்று என்பதற்கும் அஃது...
5. குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ
குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ கருப்பிரத மோத்தையோ காட்டு – மருட்டரித்த வாசானைப் போல்வரோ வாறாறுக் கப்புறத்தே பேசா திருத்தவல்லாப் பேர். (இ-ள்.) குருட்டு அரிப்பனார்க்கும் குபேரன் என்று பேரோ கருப்பிரதம் மோத்தையோ காட்டும்- பிறவி அந்தகனாகிய அரிப்பாளனுக்கும்...
4. குட்டித் திரட்கரடி யாறொழுகக் கோன் குதித்துக்
குட்டித் திரட்கரடி யாறொழுகக் கோன் குதித்துக் கட்டிப் புதைந்த கதையாகும் - துட்டமலப் பித்திலே மூத்தவர்கள் பேய்பிதற்றாம் பேதையர்க்குப் புத்திபோற் காட்டும் பொருள். (இ-ள்.) துட்ட மலப்பித்திலே மூத்தவர்கள் பேய் பிதற்று ஆம் பேதையர்க்குப் புத்திபோல் காட்டும் பொருள்- கொடிதாகிய...