ஒழுவிலொடுக்கம்

விரத்தி விளக்கம்

179. நித்திரைசெய் வீட்டி னெருப்பும் பெரும்படையு

நித்திரைசெய் வீட்டி னெருப்பும் பெரும்படையு முற்றிப் புறப்பட்டார் முற்றத்தே - பித்தரைப்போ னில்லென்று சொன்னாலு நிற்பரோ வப்படிகா ணில்லறத்தை நீத்தா ரியல்பு. (இ-ள்.) நித்திரை செய் வீட்டில் நெருப்பும் பெரும் படையும் முற்றி முற்றத்தே புறப்பட்டார் நில் என்று சொன்னாலும்...

read more

178. கன்னனைப்போற் றன்னை யறிவனோ காக்கையுடன்

கன்னனைப்போற் றன்னை யறிவனோ காக்கையுடன் மன்னு குயில் போன வாறுபோ - லன்னி யமாய்ப் பேசாது போன துறவி பிறப்பறுப்பார்க் காசானு மென்றேயறி. (இ-ள்.) கன்னனைப்போல் தன்னை அறிவனோ காக்கையுடன் மன்னு குயில் போன ஆறு போல் அன்னியம் ஆய்ப் பேசாது போன துறவி- யான் இன்ன சாதி இன்னார் குலம் தாய்...

read more

177. குரங்கிற் றுனிச்சீக் குடும்பக் குழாமும்

குரங்கிற் றுனிச்சீக் குடும்பக் குழாமும் பெருங்குப்பை யிற்கரடிப் பெண்டும் - பொருந்துவரோ காலனுந் தீயுங் கடலுமிருங் கல்லுமாய் மேலு நரகாய் விடும். (இ-ள்.) குரங்கின் துனிச்சீக் குடும்பக் குழாமும் பெருங் குப்பையில் கரடிப் பெண்டும் பொருந்துவரோ- ஓர் குரங்கைப் பல குரங்கு வந்து...

read more

176. இடும்பைக்கே கொள்கலமா யேழ்நரகுக் கீடாங்

இடும்பைக்கே கொள்கலமா யேழ்நரகுக் கீடாங் குடும்பத்தைக் குற்ற மறைக்கி - னடுங்காரோ வைவர்க் கொருவ னறுதொழிலைச் செய்தலால் மெய்யைப் பொய் யாக்கி விடும். (இ-ள்.) இடும்பைக்கே கொள்கலம் ஆய் ஏழ் நரகுக்கு ஈடு ஆம் குடும்பத்தைக் குற்றம் மறைக்கின் நடுங்காரோ- அஞ்ஞானிகள் இம்மைக்கண்ணே...

read more

175. நாயலகை நெய்விரும்பி நக்குவது நஞ்சிட்ட

நாயலகை நெய்விரும்பி நக்குவது நஞ்சிட்ட பாயசமு மெய்ப்பரிசப் பாவைமிகச் - சாயாநீர் வேட்கை யசுணமிபம் விட்டின் மீன் வண்டிவையின் சாட்சியைக்கண் டார் துறவா தார். (இ-ள்.) நாய் அலகை நெய் விரும்பி நக்குவதும் நஞ்சு இட்ட பாயசமும் பாவை மெய்ப் பரிசம் மிகச் சாயா நீர் வேட்கை - நாயானது...

read more

174. தனுவாதி நான் கினுக்குஞ் சார்வழிந்து சற்று

தனுவாதி நான் கினுக்குஞ் சார்வழிந்து சற்று நினையா திளைப்பாறி நின்றான் - மனையாமோ காந்தக் கடத்தூசி காற்றற்ற தீபமென வாந்தத் துவங்களய லாம். (இ-ள்.) தனு ஆதி நான்கினுக்கும் சார்வு அழிந்து சற்றும் நினையாது இளைப்பு ஆறி நின்றால் மனை ஆமோ- போகமும் நானன்று புவனமும் நானன்று தநுவும்...

read more

173. ஊமைமணி யாட்டுகினு மோசையழிந் தாற்போல

ஊமைமணி யாட்டுகினு மோசையழிந் தாற்போல வாமதுபோனிற்க வரிதுகா - ணாமாய் வளர்ந்த வசத்தையெலா மாளமரக் காலா லளந்தெறிந்து போட்டது போ லாம். (இ-ள்.) ஊமை மணி ஆட்டுகினும் ஓசை அழிந்தால் போல ஆம் நாவிழந்த மணியைப் பிடித்து அசைப்பினும் ஓசை ஒழிந்து நின்றாற்போல- (பஞ்சவிடயங்களும் வலிய வந்து...

read more

172. உதயந் தொழப்போவார்க் குள்ளும் புறம்பும்

உதயந் தொழப்போவார்க் குள்ளும் புறம்பும் புதைய வொளி வீசுமா போலே - பதிமோகி தீக்காட்டி லேகொடுக்கச் சென்றவா கண்டக்காற் தாக்காத தன்றோ தவம். (இ-ள்.) உதயம் தொழாப் போவார்க்கு உள்ளும் புறம்பும் புதைய ஒளி வீசுமா போலே - சூரிய உதயம் தொழச்செல்வோர்க்கு உள்ளும் புறம்பும் இருள் மறைய...

read more

171. ஆசையினா லற்பசுக மாயழிந்தாற் பேரின்ப

ஆசையினா லற்பசுக மாயழிந்தாற் பேரின்ப மாசையின் போக் கென்றறிய லாகாதோ - வாசை நளிகைக் கழுக்குவந்த நாசமென நாடித் தெளியப்போ மற்றிவையைந் தும். (இ-ள்.) ஆசையினால் அற்பசுகம் ஆய் அழிந்தால் பேரின்பம் ஆசையின் போக்கு என்று அறியல் ஆகாதோ- ஆசையினாலே போதஞ் சகமுகமாய்ச் சென்று விடயங்களில்...

read more

170. செல்வ மிளமை யுடம்பு பேய்த் தேரென்று

செல்வ மிளமை யுடம்பு பேய்த் தேரென்று சொல்லுவதென் காணாரோ சுட்டது போ-யொல்லை விடுவோர் பிறப்பிறப்பின் மீளார் கண் மீண்டாற் றொடுமோ சிவனைத் தொடா. (இ-ள்.) செல்லம் இளமை உடம்பு பேய்த்தேர் என்று சொல்லுவது என் காணாரோ- செல்வமும் இளமையும் உடம்பும் இவை முதலிய பிரபஞ்சங்களும் கானற்சலம்...

read more