ஒழுவிலொடுக்கம்

அருளவத்தைத் தன்மை

211. உடற்போகம் போக வுயிர்ப்பகை போய்ப் பேறுங்

உடற்போகம் போக வுயிர்ப்பகை போய்ப் பேறுங் கெடத்தானுந் தன்னறிவுங் கெட்டோர் - நடக்கும்போ தாகாயஞ் சாணிடல்போ லாவதல்லாற் பூரணர்க்குப் போகாவூ ருண்டோ புகல். (இ-ள்.) உடல் போகம் போக உயிர்ப்பகை போய்ப் பேறும் கெடத்தானும் தன் அறிவும் கெட்டோர் - உடம்பான் அநுபவிக்கும் விடயபோகம் போக...

read more

210. செத்தவரைப் போலத் திரும்பாமற் போகலுமா

செத்தவரைப் போலத் திரும்பாமற் போகலுமா மெத்திசையு மொன்றென் றிருக்கலுமா - முத்தர் தமக் கண்டமணுச் சிற்றி லாடரங்கந் தேகமலாற் கண்டிடுகைக் கேதுமிலைக் காண். (இ-ள்.) செத்தவரைப்போலத் திரும்பாமல் போகலும் ஆம் எத்திசையும் ஒன்று என்று இருக்கலும் ஆம் முத்தர் தமக்கு- முத்தர் தமக்குச்...

read more

209. அடைப்புள்ளா யாளடர்ந்த வாமையாய்த் திக்கே

அடைப்புள்ளா யாளடர்ந்த வாமையாய்த் திக்கே யுடுப்பதா யோர்ந்துழல்வார்க் கூரார் - நடைப்பிணமே யூமைப்பே யாரெனினு மோலமிடுந் தேவர்குழாஞ் சேமக்கோ லாளிந் திரர். (இ-ள்.) அடைப்புள் ஆய் ஆள் அடர்ந்த ஆமை ஆய்த் திக்கே உடுப்பது ஆய் ஓர்ந்து உழல்வார்க்கு ஊர் ஆர்- நேயநிட்டை மாறா...

read more

208. மருண் மூகர் வாக்கறிய வல்லரோ மாயா

மருண் மூகர் வாக்கறிய வல்லரோ மாயா விருளே யொளியா யிருப்ப - ரருளுருத்த பேயரைப்பே யென்னாரோ பித்தநாப் பாலிருட்கண் பார்வைக்குப் பானு பகை. (இ-ள்.); மருள் மூகர் வாக்கு அறிய வல்லரோ மாயா இருளே ஒளி ஆய் இருப்பர் - பித்தமேறிய ஊமர்கள் நல்லறிவாளர் கூறும் அறநெறி வாக்கினை உட்கொண்டு...

read more

207. சூலையும் பேயும் பிடித்துழல்வார் சும்மாநம்

சூலையும் பேயும் பிடித்துழல்வார் சும்மாநம் போலறிவீ ரென் றுரைத்த புத்திபோன் - மூல விருளான் மறந்தறிவா ரீதென்றா னென்பா ரருளா லறிந்தறிவா ரை. (இ-ள்.) சூலையும் பேயும் பிடித்து உழல்வார் சும்மா நம்போல் அறிவீர் என்று உரைத்த புத்திபோல்-பொது மாதர் கூட்டுரவான் வரும் சூலைநோயும்,...

read more

206. கேடுஞ் சுகமு முதலெல்லாங் கீழ்ப்படுத்திக்

கேடுஞ் சுகமு முதலெல்லாங் கீழ்ப்படுத்திக் கூடுஞ் சுகம்போலக் கொள்ளாதே - நாடுநகும் பூனைக்கண் ணேரி பொருப்பேறி போலுச்சிப் பானுப்போ னீயவரைப் பார். (இ-ள்.) கேடும் சுகமும் முதல் எல்லாம் கீழ்ப்படுத்திக் கூடும் சுகம்போலக் கொள்ளாதே - துக்கமும் சுகமும் இவற்றிற்கு முதலாய் உள்ள...

read more

205. ஆசைமுத லான வனைத்தும் போய் நானதுவாம்

ஆசைமுத லான வனைத்தும் போய் நானதுவாம் வாசனையு மாண்டு மறந்தறியா - நேசத் துறும் போக வுல்லாச வூமைக்கூத்தாடிக் குறும்போக்கு வந்து நடப்பார். (இ-ள். ஆசை முதல் ஆன அனைத்தும் போய் நான் அது ஆம் வாசனையும் மாண்டு மறந்து அறியா நேசத்து உறும் போக உல்லாச ஊமைக் கூத்தாடி - ஐந்து அவா...

read more

204. மாலயனா யிந்திரனாய் வாழுவதாய் மாளுவதாஞ்

மாலயனா யிந்திரனாய் வாழுவதாய் மாளுவதாஞ் சாலமயல் பார்த்துத் தலையசைப்பர் - ஞாலமயங் குன்மத்தக் கோரணிபார்த் தோகோ வெனச்சிரிப்பர் தன்னைப்பார்த் தாடுவர் தாந் தாம். (இ-ள்.) மால் ஆய் அயன் ஆய் இந்திரன் ஆய் வாழுவது ஆய் மாளுவது ஆம் சால மயல் பார்த்துத் தலை அசைப்பர் ஞாலம் மயங்கு...

read more

203. விபரீதப் பூணு முடையும் விளியா

விபரீதப் பூணு முடையும் விளியா லபிமானமுமவரா லாட்டுந் - தபசுபோற் செய்யுஞ் சடங்குந் திகைப்புஞ் சிதம்பரத்தி லையன் றனக்கறிய லாம். (இ-ள்.) விபரீதப் பூணும் உடையும் விளியால் அபிமானமும் அவரால் ஆட்டும் தபசுபோல் செய்யும் சடங்கும்- பார்த்தபேருக்கு விபரீதமாய்த் தோன்றும்படி சிரம்...

read more

202. செகஞ்சிரிக்கத் தாஞ்சிரித்துச் சீபேயென் றோட்டி

செகஞ்சிரிக்கத் தாஞ்சிரித்துச் சீபேயென் றோட்டி லகம்புறங்கா டேச்சுக்குற் றற்றுத் - திகம்பரியாய்த் தாநந்தம் பாடிவிண்ணிற் றட்டத் துணங்கையடித் தாநந்தக் கூத்து நடிப் பார். (இ-ள்.) செகம் சிரிக்கத் தாம் சிரித்துச் சீபேய் என்று ஓட்டில் புறங்காடு அகம் ஏச்சுக் குற்றற்றுத் திகம்...

read more