ஒழுவிலொடுக்கம்

இயோகக்கழற்றி

121. மறப்பு நினைப்பு மயக்கும் விகற்பம்

மறப்பு நினைப்பு மயக்கும் விகற்பம் வெறுப்பும் விருப்பும் விடாம - லிறப்பேனைப் பானுவும் வேதியும் போற் பார்த்தும் பரிசித்தும் ஞான பந்தன் தானாக்கினான். (இ-ள்.) மறப்பும் நினைப்பும் மயக்கும் விகற்பும் வெறுப்பும் விருப்பும் விடாமலி றப்பேனை- மறப்பும் நினைப்புமாயுள்ள கேவலமும்...

read more

120. அறிவுக் கறிவா யகண்டமாய் நின்ற

அறிவுக் கறிவா யகண்டமாய் நின்ற நிறைவைக் குறைய நினைந்து - மறவையுமாய்த் தாமே சிவத்தைப் படைத்தழிப்பார் தற்றோடம் போமா றிலைபிறப்பேன் போம். (இ-ள்.) அறிவுக்கு அறிவு ஆய் அகண்டம் ஆய் நின்ற நிறைவைக் குறைய நினைந்து மறவையும் ஆய்- உயிர்க்கு உயிராய் நின்று அறிவிக்கும் அறிவாய்,...

read more

119. அறிந்ததெல்லாம் பொய்யென்ற வத்துவி தியார்க்கும்

அறிந்ததெல்லாம் பொய்யென்ற வத்துவி தியார்க்கும் வெறும்பாழி லூன்றல் விடாது - பிறந்திறப்பை யானா லுனதொழிவு மாநந்த மாமுதிப்பும் போனாற்கா ணுன் பிறப்பும் போம். (இ-ள்.) அறிந்தது எல்லாம் பொய் என்ற அத்துவிதியார்க்கும் வெறும்பாழில் ஊன்றல் விடாது பிறந்து இறப்பை ஆனால் - கண்ணினால்...

read more

118. இருட்கே வலத்தின் றெழுப்பியெ திரிட்ட

இருட்கே வலத்தின் றெழுப்பியெ திரிட்ட மருட்கே வலசகல மாற்றித் - திரிச்சுடர்போற் றன்னறிவு தின்னிக்குத் தானுணவாய்ப் போவதல்லா லுன்னுதலே யோட்டுதல்கா ணும். (இ-ள்.) இருள் கேவலத்து இன்று எழுப்பி எதிரிட்ட மருள் கேவல சகலம் மாற்றி- கருவிகள் முப்பத்தாறும் இறந்து ஆன்மபோதமும் இறந்து...

read more

117. உட்புறம்பாம் பூசனையு மியோக சமாதிகளுஞ்

உட்புறம்பாம் பூசனையு மியோக சமாதிகளுஞ் சுட்டறிவு கெட்டவர்போற் றூங்குவதும் - விட்டுப் பகல்விளக்கு முச்சிப் படிகமும் போற் பாச மகலநிற்பார்க் கார்சரியொப் பார். (இ-ள்.) உள் புறம்பு ஆம் பூசனையும் யோக சமாதிகளும் சுட்டு அறிவு கெட்டவர்போல் தூங்குவதும் விட்டு - அந்தரியாகம்...

read more

116. மணிப்பாம் பிருளின் மறைந்திருக்கத் தேடுங்

மணிப்பாம் பிருளின் மறைந்திருக்கத் தேடுங் கணக்காந்தற் போதத்தைக் காட்டி-யுணர்த்துகினு நீரிற் கிணறு நிழலுயுத்த மும்போலா மாரித்தை நீக்கியிருப் பார். (இ-ள்.) மணிப்பாம்பு இருளில் மறைந்து இருக்கத் தேடும் கணக்கு ஆம் தற்போதத்தைக் காட்டி உணர்த்துகினும் - சென்னியின் மீது...

read more

115. குரங்கை நினையா திருமென்று கூறத்

குரங்கை நினையா திருமென்று கூறத் திரும்பியதுவே தியானம் - வருங்கதை போல் நீ சிவமாய் நில்லென்றா னீங்கியது வாய் நினைந்து மாய்வையது வன்றோ மலம். (இ-ள்.) குரங்கை நினையாது இரும் என்று கூறத்திரும்பி அதுவே தியானம் வரும் கதைபோல்- ஓர் புருடன் ஓர் பேதைக்குக் குரங்கினை...

read more

114. கட்டிய நாண் விட்டாலுங் கந்தகலாக் கன்றுகளைத்

கட்டிய நாண் விட்டாலுங் கந்தகலாக் கன்றுகளைத் தட்டிப் புறப்படுத்துந் தன்மைபோ - லொட்டொழித்து நின்றாற்போ னீசிவமாய் நில்லென்று நீக்கமறுத் தொன்றாக்கி லொன்றிரண்டா கும். (இ-ள்.) கட்டிய நாண் விட்டாலும் கந்து அகலாக் கன்றுகளைத் தட்டிப் புறப்படுத்தும் தன்மை போல் - தறியோடுங்...

read more

113. பழக்கங் கொடியதுபார் பாறையினுங் கோழி

பழக்கங் கொடியதுபார் பாறையினுங் கோழி கிழிக்கும் பொலியைக் கிளறும் - விழித்துங் குருடர்க் கொளிபகையாய்க் கூசிக்கோல் போடா ரருளைப் பகுக்குமான்மா. (இ-ள்.) பழக்கம் கொடியது பார் பாறையினும் கோழி கிழிக்கும் பொலியைக் கிளறும் - யாவர்க்கும் பன்னாள் தொன்றுதொட்டு வரும் பழக்கம்...

read more

112. ஆகாயத் தேபலவுந் தோன்றி யடங்காதோ

ஆகாயத் தேபலவுந் தோன்றி யடங்காதோ நீகாயத் தோடழுந்தி நீங்கியரு - ளாகாதோ வென்று சலிப் பானே னெ திரற்ற பூரணத்தே யொன்று மிலைகா ணுனக்கு. (இ-ள்.) நீ காயத்தோடு அழுந்தி நீங்கி அருள் ஆகாதோ என்று சலிப்பான் ஏன்- நீ காயத்தோடு பொருந்தி இருப்பதாய்க் கருதி இக்காயம் நீங்கி எனக்கு ஓர்...

read more