சுருதி குருவாக்குச் சுவாநுபவ மூன்றும் சரியொத்த போதமுனைச் சார்வைத் - தெரிய உரைத்த நூற் பேர்கே ளொழிவி லொடுக்கம் விரித்த நூற் கெல்லாம் விதை . (இ-ள்.) குருவாக்கு சுருதி சுவா நுபவம் மூன்றும் சரி ஒத்த போதமுனைச் சார்வை - ஞானாசாரியர் அருளிச்செய்த உபதேசமொழிகளும், இம்மொழிகள்...
ஒழுவிலொடுக்கம்
பொதுவிலுபதேசம்
63. மகவான் கண்பார்த்தவர்க்கு மாண்பாய்த் தனக்குப்
மகவான் கண்பார்த்தவர்க்கு மாண்பாய்த் தனக்குப் பகமா யிலச்சைவிடாப் பண்பாய்ச் - சகமாணக் கண்ணாரி போல்வேடக் கண்ணாடி காட்டு தவ மெண்ணூழி காலமிருந் தென். (இ-ள்.) மகவான் கண் பார்த்தவர்க்கு மாண்பு ஆய்த் தனக்குப் பகம் ஆய் இலச்சை விடாப் பண்பு ஆய்- இந்திரனது கண்களைப் பார்த்த...
62. அறியாமை நீங்கி வறிவா யறிவே
அறியாமை நீங்கி வறிவா யறிவே யறியாம லாயிரண்டு மற்றுப் - பிரியாதார் தன்னிழப்பின் ஞான சமாதிக்குச் சாதகரா மந்நிலைக்கே சீவன் முத்தராம். (இ-ள்.) அறியாமை நீங்கி அறிவாய் அறிவே அறியாமல் ஆய் இரண்டும் அற்றுப்பிரியாதார் -- சகல கேவலம் ஆகிய அறியாமை நீங்கித்தம்மை அருளாற்கண்டு...
61. அதிபக்கு வத்தாற் கநுக்கிரகஞ் செய்யும்
அதிபக்கு வத்தாற் கநுக்கிரகஞ் செய்யும் புதுமைக்குச் சாத்திரங்கள் போதா - திதுவென்னாப் பேறே யனந்தம் பிரகாரம் வந்தானும் வேறே யனந்த விதம். (இ-ள்.) அதிபக்குவத்தாற்கு அநுக்கிரகம் செய்யும் புதுமைக்குச் சாத்திரங்கள் போதாது - தீவிர தர பக்குவம் உடையானுக்கு ஞானாநுக்கிரகம் பண்ணும்...
60. ஆனைமதப் பட்டா லலங்கார மன்றிநாய்
ஆனைமதப் பட்டா லலங்கார மன்றிநாய் தானுமதப் பட்டாற் சரியாமோ - ஞானி தடைமீறி னாலுஞ் சதுராகுங் கன்மி கடைமீற லாகாது காண். (இ-ள்.) ஆனை மதப்பட்டால் அலங்காரம் அன்றி நாய் தானும் மதப்பட்டால் சரி ஆமோ - மதமேறா முன்னும் சிறப்புள்ள யானை பின் மதமேறித் தன் தடைகடந்து சேறினும்...
59. பூசி முடிப்பனவும் பூண்பனவும் பொற்றுகிலு
பூசி முடிப்பனவும் பூண்பனவும் பொற்றுகிலு மாசை மிகுந்த வரசியர்க்காங் - காசிற்ற முண்டையர்க்காகாசீவன் முத்தனுக்குப் போகமலாற் குண்டையொப்பார்க் கேனிதுவா கும். (இ-ள்.) பூசிமுடிப்பனவும் பூண்பனவும் பொன்துகிலும் ஆசை மிகுந்த அரசியர்க்கு ஆம்- சந்தனமாதி பூசப்படுவனவும், மல்லிகையாதி...
58. தானல்லர் தன்னதல்லர் தத்துவசா லத்தலைவர்
தானல்லர் தன்னதல்லர் தத்துவசா லத்தலைவர் மேனிசதா நந்தம் விளையுமிடம் - யானைக்கை போலே யிவருடம்பிற் போகமெலாம் பூசையித னாலே சகம்பிழைக்கு மெண். (இ-ள்.) தான் அல்லர் தன்னது அல்லர் தத்துவசாலத்தலைவர் மேனி சதாநந்தம் விளையும் இடம் - தனு கரண புவன போகங்களாய் உள்ள தத்துவங்கள் எல்லாம்...
57. சன்மார்க்கமே முதலாய்த் தாதமார்க் கத்தளவுந்
சன்மார்க்கமே முதலாய்த் தாதமார்க் கத்தளவுந் தன் மார்க்கமான வெங்கள் சம்பந்தன் - றன்னைத் துறவி யரசு சுகியோகி போகி அறவன் மறவனென லாம். (இ-ள்.) சன்மார்க்கமே முதலாத் தாதமார்க்கத்து அளவும் தன்மார்க்கம் ஆன எங்கள் சம்பந்தன் தன்னை - ஞான முதல் சரியை ஈறாய்ச் சொல்லப்பட்ட நான்கு...
56. நாயேறி வீழ்ந்தென் னடாத்துகிலென் ஞானிக்குப்
நாயேறி வீழ்ந்தென் னடாத்துகிலென் ஞானிக்குப் பேயாஞ் சகம்பழித்தென் பேணுகிலென் - றோயார் பெருமை சிறுமையிலை பின்னுமுன்னு மில்லை வரைவற்று வேண்டிய செய் வார். (இ-ள்.) நாய் ஏறி வீழ்ந்து என் நடாத்துகில் என் ஞானிக்குப் பேய் ஆம் சகம் பழித்து என் பேணுகில் என் தோயார் - நாய்மேல்...
55. காலனுக்குப் பாவமென்றுங் காற்றுங் கதிரவனுஞ்
காலனுக்குப் பாவமென்றுங் காற்றுங் கதிரவனுஞ் சீலமிலா ரென்றுஞ் சிவயோகி - மேலொன்றைச் சுட்டுவதுந் தம்மைச் சுழற்றிவிடா தாட்டு மலக் கட்டின் பிராந்திவலுக் காண். (இ-ள்.) காலனுக்குப் பாவம் என்றும் காற்றும் கதிரவனும் சீலம் இலார் என்றும் சிவயோகி மேல் ஒன்றைச் சுட்டுவதும்-...