ஒழுவிலொடுக்கம்

சத்திநிபாதத்துத்தமரொழிவு

81. இரும்பை வடிவாக்கு மியல்பினர்க்குப் பச்சை

இரும்பை வடிவாக்கு மியல்பினர்க்குப் பச்சை மரஞ்சுடுமா போன் ஞானம் வாய்க்கு - மிருந்தவிட நீர்த்தா மரையிலைபோ னீங்கு முலகமெலாம் பேய்த்தேர் போறோன்றும் பிரிந்து. (இ-ள்.) இரும்பை வடிவு ஆக்கும் இயல்பினர்க்குப் பச்சைமரம் சுடுமாறு போல் ஞானம் வாய்க்கும் - இரும்பினை ஓர்பாவை...

read more

80. கல்லையுரு வாக்குங் கழற்றியிலே யில்வாழ்க்கைச்

கல்லையுரு வாக்குங் கழற்றியிலே யில்வாழ்க்கைச் சில்லநீர் போலத் தெளிந்துவருந் - தொல்லுலகங் கான்ற சோ றாகுங் கதலித்தண் டைக்கனலி லூன் றல்போன் ஞானமுதிக் கும். (இ-ள்.) கல்லை உரு ஆக்கும் கழற்றியிலே இல்வாழ்க்கை சில்லம் நீர் போலத் தெளிந்து வரும் - கல்லினை ஓர் பாவை வடிவாக்கும்...

read more

79. மாற்றுப் பலவகையாம் பொன்னோட வைப்பான் போற்

மாற்றுப் பலவகையாம் பொன்னோட வைப்பான் போற் றேற்றிச் சிவாகமத்தாற் செப்புகினு - மேற்ற பரிபாகத் தாலே பழுப்பாம் பலவும் மொருபாக மன்றென் றுணர். (இ-ள்.) பலவகை ஆம் பொன்மாற்று ஓட வைப்பான் போல் சிவாகமத்தால் தேற்றிச் செப்புகினும்- பலவகையாய்த்தோற்றும் மாற்றுப்பொன்களைப் பத்து மாற்று...

read more

78. பதியிறக்கக் கேட்டிறந்த பத்தினிபோற் பால்போ

பதியிறக்கக் கேட்டிறந்த பத்தினிபோற் பால்போ லதிமோகி தீப்புகல்போ லன்பாம் -விதவையர்போற் கன்னன் கடையிற் கொடைபோலக் காணலாந் தன்னையிழ வாதிழத்த றான். (இ-ள்.) பதி இறக்கக் கேட்டு இறந்த பத்தினி போல் பால்போல் அதிமோகி தீப்புகல்போல்- பதி இறந்தான் என்று பிறர் கூறக்கேட்ட அக்கணத்தில்...

read more

77. காலமறை தேசமறை கன் மறைபோற் காண்பாரும்

காலமறை தேசமறை கன் மறைபோற் காண்பாரும் பாலுணும்புள் ளிப்பிமீன் பக்கிதீக் - காலு மிரும்பினீர் மின்னலிலே யேற்றபணம் பார்ப்பார் தரும்பொருளைக் கொள்ளுவார் தாம். (இ-ள்.) காலமறை தேசமறை கல்மறைபோல் காண் பாரும் - முன் ஓர்காலத்து ஓர்பொருளை அறியாதிருந்து பின் ஓர்காலத்து அதனை அறிந்து...

read more

76. பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துமல மாயைக்

பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துமல மாயைக் கருமத்தை யெல்லாங் கழற்றிச் - சரிதாதி வாதனையாம் போத மயக்கத்தை வாக்காலே போதை செய்து போக்கிவிடப் போம்.  (இ-ள்.) பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் மலம் மாயை கருமத்தை எல்லாம் கழற்றி- பறவை முட்டையைச் செட்டையாற் பரிசித்தல்போல்...

read more

75. தேட்டந் திரண்ட திருமேனி யுட்புறம்பாய்க்

தேட்டந் திரண்ட திருமேனி யுட்புறம்பாய்க் காட்டு மளவே கரைபுரண்டு - கேட்ட வதிபக் குவத்தார்க் ககம்புறமென்றாறு விதிவைத்த தீக்கையா மெண். (இ-ள்.) தேட்டம் திரண்ட திருமேனி உள் புறம்பு ஆய் காட்டும் அளவே- தமது உயிருள் இருந்தும் தெரியாது தாம் தேடும் தேட்டமாகிய பேராநந்தந்தானே...

read more

74. அரைநோட்டஞ் சிந்தை பெருமூச் சறியாச்

அரைநோட்டஞ் சிந்தை பெருமூச் சறியாச் சுரமூட்ட மெல்லாந் துறத்த - லுரைதோற்றா மான மவுனம் விகள மறவைசா வானவிவை பத்துமவத்தை. (இ-ள் ) அரைநோட்டம் சிந்தை பெருமூச்சு அறியாச் சுரம் ஊட்டம் எல்லாம் துறத்தல் உரை தோற்றா மானம் - மனம் சக முகத்தைவிட்டு அகமுகமாய் நிற்றலின் அருகிய...

read more

73. வேர்க்குங்கண் ணீர் ததும்புங் கம்பிக்கு மெய்ந்நடுங்கும்

வேர்க்குங்கண் ணீர் ததும்புங் கம்பிக்கு மெய்ந்நடுங்கும் வார்த்தை நழுவு மனம்பதறுங் - கார்க்கதமாய்க் காந்து முரோமாஞ் சலியாகுங் காதலித்தார்க் கேய்ந்தகுணங் காணிவையெட்டும். (இ-ள்.) வேர்க்கும் கண் நீர் ததும்பும் கம்பிக்கும் மெய் நடுங்கும் வார்த்தை நழுவும் மனம் பதறும்...

read more

72. மேலைச் சுகம் வெறுத்து மேலொடுகீ ழற்றுவெறுஞ்

மேலைச் சுகம் வெறுத்து மேலொடுகீ ழற்றுவெறுஞ் சாலப்பொய் யாயுடலார் தானார்தன் - மூலமா ரென்றுதெரி விப்பாரை யெய்து வோ மென்றிரண்டா யொன்றுபடத் தேட்டமுதிக் கும். (இ-ள்.) மேலைச் சுகம் வெறுத்து மேலொடு கீழ் அற்று வெறும் சாலப் பொய் ஆய் உடல் ஆர் தான்ஆர் தன்மூலம் ஆர் என்று- மேலாகிய...

read more