தின்னிற் றிமிரில் விடம்பிடித்துத் தீர்ந்துவிடும் பொன்னை நினைக்கப் பொறாது காண் - பின்னை மருந்தாலு மந்திரத்தி னாலுந் தவிராப் பெரும்பாவம் பெண்ணிற் பெரிது. (இ-ள்.) தின்னில் திமிரில் விடம் பிடித்துத் தீர்ந்து விடும் பொன்னை நினைக்கப் பொறாது காண் பின்னை மருந்தாலும்...
ஒழுவிலொடுக்கம்
விரத்தி விளக்கம்
168. நாடுநகர் வீடுடையா டாய் தந்தை நட்பு மக்கண்
நாடுநகர் வீடுடையா டாய் தந்தை நட்பு மக்கண் மாடுகுலம் பொன்னுடம்பின் வாதனைகள் - கூடத் தொடுத்தவலைக் கண்ணித் துடக்கிதனை யிப்போ விடப்பெறுவா ரேன் பிறப்பார் மேல். (இ-ள்.) நாடு நகர் வீடு உடையாள் தாய் தந்தை நட்பு மக்கள் மாடு குலம் பொன் உடம்பின் வாதனைகள் - நாடும் நகரும் வீடும்...
167. பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி
பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரி யைப்பரவி விட்டுவிட மாட்டார் வெறுவீடர் - வெட்ட வெறுவெலும்பை நாய்கறண்ட வேந்தர்வரநாய்பார்த் துறுமுவதைக் காட்டுவோ மோ. (இ-ள்.) பட்டினத்துப் பிள்ளையினைப் பத்ரகிரியைப் பரவி விட்டு விடமாட்டார் வெறுவீடர் - அளவற்ற செல்வராயிருந்தும்...
166. ஊர்க்குருவியும் வளர்த்த குஞ்சு மொருமனையிற்
ஊர்க்குருவியும் வளர்த்த குஞ்சு மொருமனையிற் பாக்கனையும் பார்த்திது நம் பற்றென்னா - மூர்க்க ரரிபிரம ரிந்திரர்கள் வாழ்வநித்த நம்வாழ் வொருபொருளோ வென்றொழிவா ரோ. (இ-ள்.) ஊர்க்குருவியும் வளர்த்த குஞ்சும் ஒரு மனையில் பாக்கனையும் பார்த்து இது நம்பற்று என்னா மூர்க்கர் - ஓர்...
165. தேடப்படும் பொருளைச் சிக்கன வாகப்புதைத்துக்
உ திருச்சிற்றம்பலம் ஏழாம் அதிகாரம் துறவு எத்தனை உள் துறவு உடையார் ஆயினும் புறப்பற்றோடு இருப்பின், இப்பற்று ஒரோர் காலை அறிவை மயக்கும் ஆகலின், புறத்துறவும் வேண்டும் என்று இதனுள் புறத்துறவிலக்கணம் கூறினார். ஆகலின், இவ்வதிகாரத்திற்குத் துறவு என்று பெயராயிற்று. தேடப்படும்...
164. வேண்டா பிறப்பென்ற வார்த்தையினின் மெய்விடயந்
வேண்டா பிறப்பென்ற வார்த்தையினின் மெய்விடயந் தீண்டா ததிலே தெரியாதோ - காண்பீ ருடம்பு மிகையொன்றி லாமையே நோன்பென் றடங்க வடங்கினாரை. (இ-ள்.) வேண்டா பிறப்பு என்ற வார்த்தையினில் - பிரபஞ்சம் பொய் என்றும், பிறவி ஆகாது என்றும், மெய்ஞ்ஞானிகளும் பொய்ஞ்ஞானிகளும் கூறிய...
163. பொய்யென்ற வார்த்தை புரையற்று மெய்யானால்
பொய்யென்ற வார்த்தை புரையற்று மெய்யானால் மெய்யென்பது தேட வேண்டுமோ - மையிருளைத் தீர்த்த வெயிலைத் திரும்பி யசைத்திமைத்துப் பார்த்ததிலென் சந்தையம்வைப் பாய். (இ-ள்.) பொய் என்ற வார்த்தை புரை அற்று மெய் ஆனால் மெய் என்பது தேடவேண்டுமோ - கருவிகள் எல்லாம் பொய் என்று சொன்ன...
162. உலகத்தை மாயா வுடலைப்பொய் யென்றா
உலகத்தை மாயா வுடலைப்பொய் யென்றா லலகைத்தேர் போலறிவ தல்லால் - விலகித் துடைத்தொழித்த லாகுமோ சொப்பனத்தீச் சூழ்ந்தாற் கடக்கவிடுஞ் சாக்கிரம்போற் காண். (இ-ள்.) உலகத்தை மாயா உடலைப் பொய் என்றால் அலகைத்தேர்போல் அறிவது அல்லால் விலகித் துடைத்து ஒழித்தல் ஆகுமோ - மாயாகாரியமாகிய இப்...
161. மெய்யாகத் தோன்றிவிடும் பொய்யை விசாரிக்கிற்
மெய்யாகத் தோன்றிவிடும் பொய்யை விசாரிக்கிற் பொய்யாய்ச் சுவர்ப்பாம்பாய்ப் போமன்றி - யையா தொழிலைச் செயிற்றாணுச் சோரனைப்போற் றோன்றி கழலப் பறையறைதல் காண். (இ-ள்.) மெய் ஆகத் தோன்றி விடும் பொய்யை விசாரிக்கில் பொய் ஆய் சுவர்ப்பாம்பு ஆய்ப்போம் அன்றி ஐயா தொழிலைச் செயில்-...
160. கூரிருளின் மின்மினியின் கூட்டம் போல் வாழ்சகத்தை
கூரிருளின் மின்மினியின் கூட்டம் போல் வாழ்சகத்தை யாரறிவா ரந்த வறிவுதயம் - சூரியன்கா ணுன்னீழ லைக்கெடுத்த வுச்சியிலே வூனமறச் சொன்னா ரவத்தைகளைந் தும். (இ-ள்.) கூர் இருளில் மின்மினியின் கூட்டம் போல் வாழ் சகத்தை யார் அறிவார் அந்த அறிவு உதயம் சூரியன்- மழைக்காலத்து...