என்னாணை யென்னாணை யென்னாணை யேகமிரண் டென்னாமற் சும்மா திருவென்று - சொன்னான் றிருஞான சம்பந்தன் சீகாழி நாட னருளாளன் ஞானவிநோ தன். (இ-ள்.) என் ஆணை என் ஆணை என் ஆணை ஏகம் இரண்டு என்னாமல் சும்மாதிரு என்று சொன்னான் - முக்காலும் தமது பேரில் திருவாணைக்கூறி முத்தியில் வேதாந்தியைப்...
ஒழுவிலொடுக்கம்
சரிதைக் கழற்றி
150. கயிற்றரவுங் கட்டையினிற் கள்ளனும் போன் மாயா
கயிற்றரவுங் கட்டையினிற் கள்ளனும் போன் மாயா மயக்கமற்ற வேதாந்த வாழ்வு - முயற்சி கெட்ட வானந்தா தீதத்தே யாணவரா மாகமமுந் தானந்தி னார்க்குச் சமன். (இ-ள்.) கயிற்றரவுங் கட்டையினில் கள்ளனும் போல் மாயா மயக்கம் அற்ற வேதாந்த வாழ்வும் - உள்ள கயிற்றினிடத்து இல்லாத பாம்பு...
149. உடலிருந்தென் போயென் னுருவருவ மூன்று
உடலிருந்தென் போயென் னுருவருவ மூன்று மடைவர் தொழிலு மனாதி - குடமுடைத்து மண்ணென்ன வேண்டுமோ மாயா வயிந்துவத்து முண்ணின்று பார்த்தியிப்போ தும். (இ-ள்.) உடல் இருந்து என் போய் என் உரு அருவம் மூன்றும் அடைவர் தொழிலும் அநாதி - இவ்வுடல் இருந்ததனால் அவ்வின்பம் வருதற்குத் தடை...
148. உடம்புள்ள மட்டும் விடய மொடுங்கா
உடம்புள்ள மட்டும் விடய மொடுங்கா வொடுங்குகிலோ கேவலமா மும்ப ரிடம்புட் பறந்தாற் கலங்குமோ பாசத்தி னுண்மை யறிந்தாற் சுடாத்தடைபோ லாம். (இ-ள்.) உடம்பு உள்ள மட்டும் விடயம் ஒடுங்கா ஒடுங்குகிலோ கேவலம் ஆம்- விடயங்கள் அநுபவித்தற்கு ஏதுவாய உடம்பிருக்கும் அளவும் அவ்விடயங்கள் ஒழியா...
147. எங்கும் பரிபூ ரணமென்னி னீதல்ல
எங்கும் பரிபூ ரணமென்னி னீதல்ல வங்கங்கா மென்னும்போ தங்கிலையோ - பங்காகேள் ஆகாயந் தீண்டிவிடு மற்ப வறிவழிவி லேகாண்பே ரின்பமுதிக்கும். (இ-ள்.) எங்கும் பரிபூரணம் என்னில் ஈது அல்லது அங்கு அங்கு ஆம் என்னும் போது அங்கு இலையோ பங்காகேள் - அப்பேரின்பம் இருநூற்றிருபத்துநாலு புவனம்...
146. விடய முதித்து நின்று விட்டவிடங் கீழ்மே
விடய முதித்து நின்று விட்டவிடங் கீழ்மே லிடைவிடா தேநிறைந்த வின்பந்-தொடுவரோ தோன்றி யழிவதுவே துக்கசுக முன்னுண்மை தோன்றா வடங்காச் சுகம். (இ-ள்.) விடயம் உதித்து நின்று விட்ட இடம் கீழ் மேல் இடைவிடாதே நிறைந்த இன்பம் தொடுவரோ- ஓர்விடயத்தின் கண் தோன்றிநின்று அழியப்பட்ட இன்பம்...
145. பேரின்ப முன்னைப் பிரியாதுன் னுண்மையது
பேரின்ப முன்னைப் பிரியாதுன் னுண்மையது வோரின்ப மாய்விடயத் தூடுதிப்பும் - பேரின் பழிவிலே தோன்று மறிவு மயலா மொழியு மிரண்டின்ப மும். (இ-ள்.) பேரின்பம் உன்னைப் பிரியாது உன் உண்மை அது - அந்தப் பேரின்பம் உன்னை விட்டு எக்காலமும் ஓர் அணுவளவேனும் பிரியாதிருப்பது, அவ்வின்பமே...
144. இன்பே யறிவுக் கிடம்புள்ளி னைந்தது போற்
இன்பே யறிவுக் கிடம்புள்ளி னைந்தது போற் றுன்பே யணுப் பொருப்பாய்த் துக்கிக்கும் நன்குணத்தாற் பேரின்புக் கிச்சை பிறந்ததினிக் கேளுனக்குப் பேரின்பந் தேடிப் பெறாய். (இ-ள்.) இன்பே அறிவுக்கு இடம் - இந்தப்பேரின்பம் பரிபூரணம் ஆகலின், இவ்வின்பமே ஆன்மா இருத்தற்கு இடம் ,ஆனால்...
143. ஞானக் கிரியை நடிப்பவர்க்கு நாடோறும்
ஞானக் கிரியை நடிப்பவர்க்கு நாடோறும் போனத் தளவே புசிப்பன்றி - யேனாந் துறவா யவாவறுத்து மெய்யுணர்ந்த தூய வறிவார்க் கறியாவின் பம். (இ-ள்.) ஞானக்கிரியை நடிப்பவர்க்கு நாள்தோறும் போனத்து அளவே புசிப்பு அன்றி - அகத்து ஞானம் இன்றிப் புறத்து ஞானாசாரமாய் நடிப்பவர்க்கு எக்காலமும்...
142. கல்வியாய்ப் புத்தகமாய்க் காவிகடுக் குட்கட்டாய்ப்
கல்வியாய்ப் புத்தகமாய்க் காவிகடுக் குட்கட்டாய்ப் பல்லின் வெளுப் பொத்த பசுமார்க்க - மெல்லை கழன்ற தியானத்திற் கண்சிமிட்டு மாங்காண் கழன்ற பெரு மாயைத் தொழில். (இ-ள்.) கல்வி ஆய்ப் புத்தகம் ஆய்க் காவி கடுக்குள் கட்டு ஆய்ப் பல்லின் வெளுப்பு ஒத்த பசுமார்க்கம் - தாம் கற்ற...