சரிதை யுடல் வெறுத்த றன்னை யறிதல் கிரியோகங் கூடாமை கேளாத் - திருஞானம் வேறின்மை பேரின்பம் விட்டு தியா மேலீடு பேறின்மை தானே பெறல். (இ-ள்.) சரியை உடல் வெறுத்தல் தன்னை அறிதல் கிரி யோகங் கூடாமை - அவர்க்குச் சரியையாவது ,மலச்சுமை துக்கம் விளைக்கும் குரம்பை, அநித்திய விருது...
ஒழுவிலொடுக்கம்
விரத்தி விளக்கம்
188. அரசர்க் குடைமை யளவற்ற பேறே
அரசர்க் குடைமை யளவற்ற பேறே பெருமையா னாற்போலப் பெற்ற - வரிபிரமர்க் கப்பாலாம் வாழ்வு மணுவாகி யாதுமற லிப்போ பெருமை யிவர்க்கு. (இ-ள்.) அரசர்க்குப் பெருமை அளவு அற்ற பேறே உடைமை ஆனால் போல -அளவற்ற திரவியம் ஆடை பூஷணாதிகளைப் பெறும் பேறே அரசர்க்குப் பெருமையானாற் போல. பெற்ற...
187. பிறவாத யோனி பிறந்து பிறந் தெல்லா
பிறவாத யோனி பிறந்து பிறந் தெல்லா மறிவானா னாரென் றறியா - வறிவை யறிந்துமீ னண்ட வழிபருந்திற் குஞ்சாய்ப் பிறந்தவர்க ளேன் பார்ப்பார் பின். (இ-ள்.) பிறவாத யோனி பிறந்து பிறந்து எல்லாம் அறிவால் நான் ஆர் என்று அறியா அறிவை அறிந்து- தேவ மானுடப் பிறப்பன்றி, மற்றைப் பிறவாத யோனி...
186. கருமந் திரிவிதத்திற் கட்டவிழுங் கால
கருமந் திரிவிதத்திற் கட்டவிழுங் கால மரவுந் தவளையும் போலாகி - யிருதலையிற் கொள்ளியெறும் பாயுடம்பே கூற்றாகித் தோற்றுமெனி னுள்ளினரு மூருமென்னா கும். (இ-ள்.) கருமம் திரிவிதத்தில் கட்டு அவிழும் காலம் அரவும் தவளையும் போல் ஆகி இருதலையில் கொள்ளி எறும்பு ஆய் உடம்பே கூற்று ஆகித்...
185. கும்பிட்டுங் கீர்த்தித்துங் கோடி யுபசாரம்
கும்பிட்டுங் கீர்த்தித்துங் கோடி யுபசாரம் வம்பிட்ட பத்தி வலைவழியை - நம்புவரோ வூணாதி வாதனைக ளொன்றாத வப்பெருமை வீணே விளைக்கு மெனின். (இ-ள். கும்பிட்டுங் கீர்த்தித்துங் கோடி உபசாரம் வம்பு இட்ட பத்தி வலைவழியை நம்புவரோ - ஒருவன் வந்து அஷ்டாங்க பஞ்சாங்கத்தோடு வணங்கியும்,...
184. பொன் மலைமே லாகாயம் போவார்க்குப் பூமியுள்ளோ
பொன் மலைமே லாகாயம் போவார்க்குப் பூமியுள்ளோ ரென்னவே நாதாந்த மெய்தினரை - யென்னருகே வாவென்று பாற்கடலில் வாழரியை மண்டூகங் கூவுந் தகைமைய தொக் கும். (இ-ள்.) பொன் மலைமேல் ஆகாயம் போவார்க்கு பூமி உள்ளோர் என்னவே - பொன்மலை முடிமேல் ஆகாச கமனம் பண்ணுவோர்க்கு இந்நிலத்தின் கண்...
183. அங்கக்கா ரன்று திப்பு நாவிசுவை யான துவுஞ்
அங்கக்கா ரன்று திப்பு நாவிசுவை யான துவுஞ் சிங்கி குளிர்ந்ததுவும் போற்செகத்தோர் – சங்கத்தைத் தீண்டுமன மேபகையாய்ச் சேரா துடலோடே மாண்டு திரி வார்துறவா வார். (இ-ள்.) அங்கக்காரன் துதிப்பும் நாவி சுவையானதுவுஞ் சிங்கி குளிர்ந்ததுவும் போல் செகத்தோர் - நானா வேடங்கொண்டு...
182. துக்கஞ் சுகமான சுட்டறிவு கெட்டவர்க்குத்
துக்கஞ் சுகமான சுட்டறிவு கெட்டவர்க்குத் திக்குண்டோ வெங்குஞ் சிவாலயமா - மக்கினிக்குப் பிச்சை பொது நிழனீர் பேரிதுவே பேசார்தம் மிச்சையிருப் பேகாந்தத்தே. (இ-ள்.) துக்கம் சுகம் ஆன சுட்டு அறிவு கெட்டவர்க்குத் திக்கு உண்டோ எங்கும் சிவாலயம் ஆம்- முன் கண்ட பிரபஞ்ச துக்கம்...
181. உடுக்கை மறந்தவருக் கூர் காடென் றுண்டோ
உடுக்கை மறந்தவருக் கூர் காடென் றுண்டோ வடுத்தயலா ருண்டோபே யானாற் - சுடப்போட் டெதிரிட்ட தெல்லா மிழந்தார்க் கிருந்த பதியைக்கொண் டுண்டோ பயன். (இ-ள்.) உடுக்கை மறந்தவருக்கு ஊர் காடு என்று உண்டோ அடுத்தயலார் உண்டோ பேய் ஆனால் - குடும்பக்கூட்டங்களை எல்லாம் துரிசறத் துறந்து...
180. கட்டு நெகிழ்த்து விட்ட கள்ளனைப்போற் கங்குலிற்பேய்
கட்டு நெகிழ்த்து விட்ட கள்ளனைப்போற் கங்குலிற்பேய் வெட்டு களத்தின் வெருவினர்போல் - முட்டத் தொடர்ந்த படைபிழைத்துத் தோன்றப்போ வார் போலடங்கத் துறந்தேகு வார். (இ-ள்.) கட்டு நெகிழ்த்துவிட்ட கள்ளனைப்போல் கங்குலில் பேய் வெட்டு களத்தின் வெருவினர்போல் முட்டத்தொடர்ந்த படை...