வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட புதுமைச் சிவாநந்தம் போதும் - பதையா விளக்கொளியி லெண்ணெய் வியாபியா னாற்போற் கொளக்கொடுத்தல் சத்தியமாக் கொள். (இ-ள்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக்கொண்ட புதுமைச் சிவாநந்தம் போதும் - தன் புருடனைக்கூட இன்புறுதற்கு ஏதுவாகச் செய்யும் கலியாணச்...
ஒழுவிலொடுக்கம்
கிரியைக்கழற்றி
136. காணு மறிவுநீ காட்டறிவு நாமவற்றைக்
காணு மறிவுநீ காட்டறிவு நாமவற்றைக் காணக் கழலுங் கழற்றியிலே - நாணி நமைத்திரும்பிப் பாராதே நான்றானென் னாதே யமிழ்த்துகரகம் போனிற் பாய். (இ-ள்.) காணும் அறிவு நீ காட்டும் அறிவு நாம் அவற்றைக் காணக் கழலும் கழற்றியிலே--கருவிகளை இது இது என்று காணும் அறிவு நீ, அவற்றை...
135. மருந்து பிணியோடே மாண்டு புகைதீ
மருந்து பிணியோடே மாண்டு புகைதீ யெரிந்த விறகோ டிறக்கில் - விரிந்த தொழின் மனத்தின் மட்டே நீ தோயுமதென்னாடி நிழல் புதைத்தாற் போலெதிர்போய் நில் . (இ-ள்.) மருந்து பிணியோடே மாண்டு புகை தீ எரிந்த விறகோடு இறக்கில்- பிணிமாண்டபோது அது நீங்கற்பொருட்டு உண்ட மருந்தும் அப்பிணியோடு...
134. அழிப்பே யவனுக்கு மிச்சையது வானா
அழிப்பே யவனுக்கு மிச்சையது வானா லிழப்பே யுனக்கிச்சை யென்னா - யிழப்பை யறியா ததுகா ணறியாவஞ் ஞானங் கிறிகேளுன் போதங் கெடல். (இ-ள்) - அழிப்பே அவனுக்கும் இச்சை அது ஆனால் இழப்பே உனக்கு இச்சை என்னாய் - உன்போதத்தை ஒழிப்பதே சிவனுக்கும் இச்சை, அவனது இச்சாசத்தித்தொழிலும்...
133. அறிவாலே பற்றியனுபவித்து விட்ட
அறிவாலே பற்றியனுபவித்து விட்ட கிறியால் வருமோ கெடுவீ - ரறிவாய்நீர் ஆம்போ தறிவிப்பான் றானா யவையிரண்டும் போம் போதும் வாராப் பொருள். (இ-ள்.) அறிவாலே பற்றி அனுபவித்து விட்ட கிறியால் வருமோ கெடுவீர் - தற்போத அறிவால் ஒன்றைப் பாவித்துப்பற்றி, இஃது இங்ஙனம் இருப்பது என்று...
132. குடையுஞ் செருப்புங் கொடுநடப்ப தல்லாற்
குடையுஞ் செருப்புங் கொடுநடப்ப தல்லாற் படியும் விசும்பும் பரப்பி - யிடையாடு மாத்திரம் போலேசமைய வாதமனம் போதாத சாத்திரங்கற் றார் வீடுற் றார். (இ-ள்.) குடையும் செருப்பும் கொடு நடப்பது அல்லால் படியும் விசும்பும் பரப்பி இடை ஆடும் மாத்திரம் போலே - ஓர் ஊருக்குச்...
131. சும்மா திருக்கவைத்த சூத்திரமாஞ் சாத்திரத்தை
சும்மா திருக்கவைத்த சூத்திரமாஞ் சாத்திரத்தை விம்மாக் கதறுவதும் வேலைகளுந் - தம்மறிவா னீட்டிப் பிடித்திருக்கு நிட்டைகளு ஞானிகண்முன் காட்டும் பரியாசகம். (இ-ள்.) சும்மா திருக்க வைத்த சூத்திரம் ஆம் சாத்திரத்தை விம்மா கதறுவதும் லேலைகளும் தம் அறிவால் நீட்டிப் பிடித்து...
130. தொழிலிறுதி தானே சுகவுதய மென்றாற்
தொழிலிறுதி தானே சுகவுதய மென்றாற் றொழிலுதயந்துக்கமெனச் சொல்லோந்- தொழில் செயினும் வந்திப்போ கம்போல வுண்டுடுத்தன் மாத்திரமாய்ச் சிந்திப்பாரைப் பேணிச் செய். (இ-ள்.) தொழில் இறுதி தானே சுக உதயம் என்றால் தொழில் உதயம் துக்கம் எனச்சொல்லோம்- இம்மையைக் குறித்துச் செய்யும் உழவாதி...
129. சுகாதீதம் வேண்டிற் றொழில் செய்வோ மென்றா
சுகாதீதம் வேண்டிற் றொழில் செய்வோ மென்றா னகாரோ துயில்வார் கடந்தோ - விகாரமெனச் சாத்திரமும் பூசைச் சமாதிகளுஞ் சார்போதக் கோத்திரங்காண் மாயைக் குழாம். (இ-ள்.) சுகாதீதம் வேண்டின் தொழில் செய்வோம் என்றால் நகாரோ நடந்தோ துயில்வார்- ஆநந்தாதீதமாகிய வீடடைய விரும்பின், அதனை...
128. கிரியையான் ஞானங் கிடைத்தாலுங் கேடு
கிரியையான் ஞானங் கிடைத்தாலுங் கேடு கருவால் வருவது போற் காணு - மொருகோடி சூரியரைக் கூரிருளா லேசுருட்ட னீரகில காரணனைத் தீண்டநினைக் கை. (இ-ள்.) கிரியையால் ஞானம் கிடைத்தாலும் கருவால் வருவது போல் கேடு காணும் -கிரியைத்தொழிலால் ஞானம் கிடைத்ததாயினும், அந்த ஞானத்திற்குக்...